எல்லாமே ஸ்கிரிப்ட் ஹா? கண்ணால் சிக்னல் கொடுத்ததும் அண்ணாமலை காலில் விழும் மாணவி!
செய்தியாளர் சந்திப்பின் போது நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியை அண்ணாமலையின் காலில் விழ சொல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை தமிழகத்தில் பாஜக கட்சியை வளர்க்க பலப்பல முயற்சிகளில் இறங்கி வருகிறார். இவர் செய்யும் செயல்கள் கட்சியில் உள்ள மேல்மட்ட தலைவர்களுக்கு பிடிக்கவில்லை என்று ஒரு புறம் இருந்தாலும், தினமும் பத்திரிகையாளர் சந்திப்பு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் என தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார். 2024-ல் பாஜகவை தமிழகத்தில் பெரும் கட்சியாக உயர்த்த வேண்டும் எனவும் பல முயற்சிகளில் இருந்து வருகிறார். இருந்தும் இவர் மீது அவ்வப்போது பல குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது.
சமீபத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் நீட் தேர்வில் 104 மதிப்பெண்கள் எடுத்த ஒரு மாணவி, தனக்கு டாக்டர் சீட் கிடைக்குமா என்று எண்ணி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார். அண்ணாமலை அந்தப் மாணவியின் முழு படிப்புச் செலவையும் ஏற்றுக் கொள்வதாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார். அந்த மாணவியும் மிகுந்த மகிழ்ச்சியோடு தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்று பேட்டி அளித்திருந்தார். மேலும் நீட் தேர்வு சுலபமானது என்றும் விடாமுயற்சியுடன் படித்தால் வெற்றி பெறலாம் என்றும் கூறியிருந்தார்.
பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த செயலை பலர் பாராட்டி வந்த நிலையில், தற்போது ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. பத்திரிகையாளர் சந்திப்பு போது தமிழக பாஜக கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியிடம் கண்களால் சிக்னல் கொடுத்து அண்ணாமலையின் காலில் விழ சொல்கிறார். அந்த பெண்ணும் உடனே அண்ணாமலையின் காலில் விழுகிறார், உடனே காலில் விழ வேண்டாம் என்று அண்ணாமலை அந்த மாணவிக்கு அட்வைஸ் செய்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. எல்லாமே ஸ்கிரிப்ட் தானா என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க | ராகுலின் நடைபயணம் மக்களை ஒருங்கிணைக்கும் - நாராயணசாமி உறுதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ