கதறவிடும் காவல்துறை.. திருப்பூரை அடுத்து சேலத்திலும் துரத்தும் ட்ரோன்...
முழு அடைப்பு விதிகளை மீறுபவர்களைக் கட்டுப்படுத்துவது காவல்துறைக்கு தலைவலியாகிவிட்டது. சாலைகளில் வருபவர்களைக் கட்டுப்படுத்த நேரம் போதாது காவல்துறையினர் தவித்து வரும் நிலையில் சிறிய பாதைகளில் கூடி, மரங்களுக்கு அடியில் விளையாடும் மக்களுடன் தற்போது காவல்துறையினர் போராடி வருகின்றனர்.
முழு அடைப்பு விதிகளை மீறுபவர்களைக் கட்டுப்படுத்துவது காவல்துறைக்கு தலைவலியாகிவிட்டது. சாலைகளில் வருபவர்களைக் கட்டுப்படுத்த நேரம் போதாது காவல்துறையினர் தவித்து வரும் நிலையில் சிறிய பாதைகளில் கூடி, மரங்களுக்கு அடியில் விளையாடும் மக்களுடன் தற்போது காவல்துறையினர் போராடி வருகின்றனர்.
இவ்வாறு முழு அடைப்பு விதிகளை மீறி செய்படுவோரை பிடிப்பதற்காக கேமிரா ட்ரோன்களின் உதவியுடன் காவல்துறையினர் தற்போது களத்தில் இறங்கியுள்ளனர்.
பெரிய மற்றும் சிறிய நகரங்களில் உள்ள காவல்துறையினரும் ட்ரோன்களின் உதவியுடன் சிறிய காட்சிகளை கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை சேலம் காவல்துறையினர் ட்ரோன் கேமிரா மூலம் கண்கானித்து வருகின்றனர். இதன்போது, கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களை பிடித்ததோடு, இந்த வீடியோவுடன் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த சேலம் காவல்துறையினர் காவல்துறையினர் களமிறங்கியுள்ளனர்.
முன்னதாக திருப்பூரின் ஊத்துகுளி பகுதியில் வசிக்கும் சில இளைஞர்கள் மரத்திற்கு அடியில் கூடி கேரம் போர்ட் விளையாடுவதை காவல்துறையினர் கண்டறிருந்து, இந்த காட்சிகளை இணையத்தில் வெளியிட்டனர். திருப்பூர் வீடியோ இணையத்தில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது சேலம் காவல்துறையினரின் வீடியோவும் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இளைஞர்களை தேடி செல்லும் ட்ரோனை பார்த்து தெறித்து ஓடும் இளைஞர்கள் இடுப்பில் கட்டி இருந்த வேட்டிகள் அவிழ்ந்தாலும் பரவாயில்லை என தலை கால் புரியாமல் ஓடுகின்றனர். குறிப்பாக ஒரு இளைஞன் தங்கள் கேரம் போர்டை கையில் பிடித்து, தலையில் தடுத்து, கேமராவிலிருந்து தப்பிக்க முயல்கிறான். இதேப்போன்று கையில் கிரிக்கெட் மட்டை கொண்டு ஒரு இளைஞர் தன் முகத்தை மறைக்க முயற்சிக்கிறான், எனினும் இவர்களின் முயற்சி இறுதியில் தோல்வியில் தான் முடிகிறது.
இந்த வீடியோவைப் பார்ப்பது வேடிக்கையானதாக இருந்தாலும், முழு அடைப்பு மீறல்களைக் கையாள்வதில் காவல்துறையினர் எவ்வளவு தீவிரமாக உள்ளனர் என்பதை தான் இந்த வீடியோக்கள் காட்டுகிறது. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வழக்குகள் தொடர்ந்து முழு அடைப்பினை நீட்டிக்க செய்து வருகிறது. முழு அடைப்பு முடிந்து நம் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள மக்களாகிய நாம் தான் முன் வர வேண்டும் என்பதை இனியாவது மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.