தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 MLA-களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கேள்வி எழுப்பியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக தமிழகம் ஆளும் அதிமுக கட்சி இரு பிரிவாக பிரிந்த போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழகத்தின் அப்போதைய ஆளுநரிடம் புகார் கடிதம் அளித்தாதக டிடிவி தினகரன் ஆதரவு MLA-க்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியாதால் 3-வது நீதிபதியாக சத்யநாராயணன் நியமிக்கப்பட்டார்.


இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த புதிய நீதிபதி சத்யநாராயணன் அவர்கள்., 18 MLA-க்களையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் எனவும், தகுதிநீக்கத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது எனவும் தெரவித்தார்.


இதனையடுத்து இந்த 18 தொகுதிகளிலும் விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான அறிவிப்புகள் வெளியாகவில்லை.,


இதற்கிடையில் குறிப்பிட்ட 18 தொகுதிகளிலும் உடனடியாக இடைத்தேர்தல் நடத்தவேண்டும் என கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.


இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்., 18 தொகுதிகளுக்கும் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பாக ஜனவரி 22-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளனர்.