வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் மீது தாக்குதல்
வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் மீது இரும்பு கம்பியால் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. காயம் அடைந்த 6 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதியான பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதே பிரிவில் ராஜேஷ் கண்ணா என்பவரும் அடைக்கப்பட்டுள்ளார். கைதிகளுக்கும் இடையேதகராறு ஏற்பட்டதால் ராஜேஷ் கண்ணாவை வேறு பிரிவுக்கு மாற்ற வேண்டுமென சிறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். அவர் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ்கண்ணா தான் மாற்றப்பட்டதற்கு பேரறிவாளன் காரணம் என ஜெயில் வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட பேரறிவாளனை இரும்பு கம்பியால் சரமாரியாகதாக்கினார்.
பலத்த காயமடைந்த பேரறிவாளன் தரையில் சுருண்டு விழுந்தார். உடனே அவரை மீட்டு ஜெயில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து டாக்டர்கள்கண்காணிப்பில் உள்ளார். மொத்தம் 6 தையல் போடப்பட்டது.
இதுகுறித்து பேரறிவாளனின் வக்கீல் கூறியதாவது:- பேரறிவாளன் இன்று காலை நடைபயிற்சி சென்ற போது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ்கண்ணா என்ற கைதி இரும்பு கம்பியால்தாக்கியுள்ளார். இதனால் அவர் படுகாயம் அடைந்துள்ளார். ராஜேஷ்கண்ணா வேறு அறைக்கு மாற்றப்பட்டதற்கு பேரறிவாளன் தூண்டுதலே காரணம் என நினைத்து தாக்குதல் நடத்தியுள்ளார் என்றார்.
பேரறிவாளன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.