தனுஷ்கோடியில் 20 அடிக்கு மேல் ஆக்ரோஷத்துடன் எழும் கடல் அலைகள் - என்ன நடக்குது?
![தனுஷ்கோடியில் 20 அடிக்கு மேல் ஆக்ரோஷத்துடன் எழும் கடல் அலைகள் - என்ன நடக்குது? தனுஷ்கோடியில் 20 அடிக்கு மேல் ஆக்ரோஷத்துடன் எழும் கடல் அலைகள் - என்ன நடக்குது?](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2022/05/17/227077-c-11.jpg?itok=xnsEcSZY)
தனுஷ்கோடியில் 30 அடிக்கு மேல் ஆக்ரோஷத்துடன் எழும் கடல் அலைகளால் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் கடல் சீற்றம் காரணமாக சுமார் 20 அடி உயரத்திற்கும் மேல் ராட்சத அலைகளால் வீசுகிறது. வழக்கத்துக்கு மாறாக கடல் அலைகள் சீறிப்பாய்கிறது. அலைகளின் வேகத்தை கட்டுக்குள் கொண்டுவரப் போடப்பட்டிருக்கும் பாறைகளின் மேல் அலைகள் மோதி எழும் சத்தம் ஊரேயே உடைத்து போடுகிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடல் சீற்றம் அடைந்து காணப்படுகிறது.
மேலும் படிக்க | 100க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் ; கைதேர்ந்த கொள்ளையனின் பகீர் பின்னணி..!
மேலும் ஆக்ரோஷத்துடன் எழும் கடல் அலைகளை காண சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், வெகுதூரங்களிலிருந்து வந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
மேலும் படிக்க | ரூ100ஐ தாண்டிய தக்காளி விலை - என்ன காரணம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR