எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், அரசு அலுவலகங்களில் இருந்து ஜெயலலிதா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி படங்கள் அகற்றப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

17-வது மக்களவை தேர்தலுக்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.


இதன் காரணமாக நேற்று மாலை 5 மணியளவில் மத்திய- மாநில அமைச்சர்கள் தாங்கள் பயன்படுத்தி வந்த அரசு கார்களை திருப்பி ஒப்படைத்தனர். 


அந்தவகையில் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று மாலை திருச்சியில் இருந்த விமானத்தில் சென்னைக்கு வந்தனர். அப்போது அவர்களை அழைத்துச் செல்வதற்காக சுழல் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த அரசு கார்கள் விமான நிலையத்துக்கு வந்திருந்தன. இந்த கார்களை பயன்படுத்தாமல் அமைச்சர்கள் திருப்பி அனுப்பினர். 


அதே வேலையில் தலைமை செயலகம் உள்ளிட்ட மாநில அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் போட்டோக்களும் உடனடியாக அகற்றப்பட்டன. 


ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டாச்சியர் அலுவலகங்களில் இருந்தும் இருவரது போட்டோக்களும் அகற்றப்பட்டன. 


மக்களவை தேர்தல் 2019


17-வது மக்களவை தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29 ஆம் தேதி, ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6 ஆம் தேதி, ஆறாம் கட்ட தேர்தல் மே 12 ஆம் தேதி, ஏழாம் கட்ட தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.  


தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகதில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.