அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் தொகுதி.
2019 மக்களவை தேர்தல் வர உள்ள நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான ஒரு கூட்டணி மற்றும் அதிமுக தலைமையிலான ஒரு கூட்டணி என இரண்டு மிகப்பெரிய கூட்டணி முக்கிய கட்சிகள் இடபெற்று தேர்தலில் போட்டியிடுகின்றன. ஏற்கனவே திமுக, அதிமுக தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்குவதில் இறுதியானது.
கடந்த சில நாட்களாக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதி குறித்து ஆலோசனை நடைபெற்று வந்தது. அந்தவகையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி), தமாகா ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.