சென்னை: தமிழக தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல்க்களம் சூடு பிடித்துவிட்டது. சென்னையில் தமிழக முதலமைச்சர் தலைமையில் அதிமுகவும், பாஜக நிர்வாகிகளும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஇஅதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் (OPS), அஇஅதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆனால் இந்த பேச்சுவார்த்தை முதலமைச்சர் தலைமையில் நடைபெறுவது கட்சிக்குள் இருக்கும் சலசலப்பை காண்பிப்பதாக இருக்கிறது.


Also Read | PMK: 40 ஆண்டு கால கனவு வன்னியர் இடப்பங்கீடு நிறைவேறியதில் மகிழ்ச்சி


பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் தொகுதி பங்கீடு குறித்து கலந்தாலோசனை நடத்துகின்றனர். 


இந்நிலையில், அதிமுக – பாமக கூட்டணி குறித்து மருத்துவர் ராமதாஸ் இன்று அறிவிப்பார் என பாமக (PMK) இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருந்தார்.  


Also Read | தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும்: தலைமை தேர்தல் ஆணையர்


வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு கொடுப்பது தொடர்பாக நேற்று முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார் என்பதும், அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.  


இதன் அடிப்படையில், இன்று நடக்கும் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அதிமுக கூட்டணி தொடரபான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அரசியல் வட்டாரங்கள் நம்புகின்றன.


Also Read | LPG விலை ஒரே மாதத்தில் மூன்றாவது முறை விலை உயர்வு: ராமதாஸ் ஆவேசம்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR