அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார்!!

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளில் ஓட்டுக்கு பணம் கொடுத்தல் மற்றும் பணப்புழக்கம் குற்றச்சாட்டு காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த 4 தொகுதிகளுக்கும் கடந்த 19-ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. அரவக்குறிச்சி 81.92 சதவீதமும், தஞ்சையில் 69.02 சதவீதமும், திருப்பரங்குன்றத்தில் 70.19 சதவீதமும், நெல்லித்தோப்பில் 85.52 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.
அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். 23673 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியை வீழ்த்தினார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றுள்ளார்.