அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் முடிந்தது - ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றம்
சுமார் ஒன்றரை மணிநேரம் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் உடல்நல குறைவால் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ஆர்.டி. ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை. அதேபோல அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், சி.வி. சண்முகம் தனிப்பட்ட காரணங்களுக்காக பங்கேற்கவில்லை. கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகிய மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை.
சுமார் ஒன்றரை மணிநேரம் நடந்த கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.