சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை  எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வாபஸ் பெற்றுள்ளாார். 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி. உதயக்குமாரை அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஜூலை17ல் நியமித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரியும், சட்டமன்றத்தில் தனக்கு அருகில் இருக்கை ஒதுக்கக் கோரியும் சபாநாயருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பி இருந்தார்.


ஐந்து முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.


கட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கபட்டவர்களை அங்கீகரிக்கும்படி, தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருக்கும், சட்டமன்ற செயலாளருக்கும் உத்தரவிட வேண்டும், இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.


மேலும் படிக்க | தமிழக வேளாண் பட்ஜெட்: விவசாயிகளுக்கு அதிரடி திட்டங்களை வழங்கியுள்ள தமிழக அரசு!


இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தபோது, தற்போது எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஒதுக்கியதால் மனுவை திரும்பெற அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுவை திரும்பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 66 அதிமுக எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுக இருந்த நிலையில், 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.


கட்சி நீக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து, 2022-ம் ஆண்டு, ஜூலை17-ல் கட்சியின் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி. உதயக்குமார் மற்றும் துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ண்மூர்த்தியை நியமித்த அதிமுக, தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயருக்கு கடிதம் அனுப்பி வைத்திருந்தனர். 5 முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டபோதிலும் கோரிக்கையின் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அதிமுகவின் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.


மேலும் படிக்க | TN Agriculture Budget 2024: லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு நல்ல செய்தி... விரைவில் நிவாரணம் - பட்ஜெட்டில் அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ