கள்ளச்சாராய வியாபாரிகளை என்கவுண்டர் செய்யுங்கள் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்
கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர்கள் மீது நிறைய வழக்குகள் இருப்பதால் தமிழக அரசு என்கவுன்டரை கையாள வேண்டும், அப்போது தான் மற்றவர்களுக்கு பயம் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி கருப்பண்ணன் ஆவேசமாக பேசியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 56 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசின் மெத்தன நடவடிக்கை கண்டித்து அதிமுக சார்பில் மாநில முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கேசி கருப்பண்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், பண்ணாரி உட்பட 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவினர் பங்கேற்றனர். இதையடுத்து ஆர்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், 40 தொகுதிகள் இழந்த போதிலும் நாளை வர உள்ள 234 தொகுதிகளில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
2026ம் ஆண்டு தேர்தல் இந்த திமுகக்கு சுட்டிக்காட்டி கூறும் வகையில் அமையும். கள்ளச்சாராயம் விழுப்புரத்தில் தலைதூக்கியபோது மீண்டும் தமிழகத்தில் நிகழாத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். தமிழக முதல்வர் கள்ளச்சாராயம் விவகாரத்தில் என்ன சொல்ல போகிறார்?, என்ன முற்றுப்புள்ளி வைக்க போகிறார்? என தெரியவில்லை. தமிழக அரசுக்கு கள்ளச்சாராயம் விற்பனை குறித்து நன்றாக தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?, இதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?, மேலும் இந்த சம்பவம் நிகழாத வகையில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது தான் அதிமுகவின் கேள்வியாக உள்ளது என பேசினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கேசி கருப்பண்ணன், கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்றத் உறுப்பினர் செந்தில்குமார் கடந்த பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடரின்போது கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தபோதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அன்றைய தினமே நடவடிக்கை எடுத்து வந்திருந்தால் தற்போது கள்ளச்சாராயம் காரணமாக உயிரிழப்பு நிகழ்ந்து இருக்காது. அதிமுகவுக்கு நல்ல பெயர் வந்து விடும் என்ற எண்ணத்தில் திமுக அரசு கவன ஈர்ப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார். எம்எல்ஏக்கள், பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்டோர் எஸ்பியிடம் சொன்ன போதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மாறாக திமுக பிரமுகர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் என புகார் கூறினார் கருப்பண்ணன். கள்ளச்சாராயம் மூலம் இவ்வளவு உயிரிழப்புக்கு திமுக அரசு தான் காரணம் என்றும், முதல்வர் ஸ்டாலின் இதை பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்ய வேண்டும், இல்லையென்றால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். காவல்துறை திமுக அரசின் ஏவல் துறையாக உள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சினை காப்பாற்ற சாராயம் தயாரித்த நபர் மீது நிறைய வழக்குகள் இருப்பதால் என்கவுன்டர் போடுங்கள் என ஆவேசமாக கருப்பண்ணன் கூறினார். அப்ப தான் மற்றவர்களுக்கு பயம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதை தொடர்ந்து பேசிய அவர் 2026ம் ஆண்டு யார் வேண்டுமானாலும் களத்திற்கு வரட்டும், அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும் என்றார். 100சதவீதம் அதிமுக ஆளுட்சியாக அமையும் என்றும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் எல்லாம் ஜீரோ, எடப்பாடி பழனிசாமி தான் ஹீரோ என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி கருப்பண்ணன் பேசினார்.
மேலும் படிக்க | வயிற்று பிழைப்பிற்காக சென்ற மீனவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ