சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து பேட்டியளித்தார். அதில் தனக்கு பதவி ஆசை இல்லை. ஆனால், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இது குறித்து பொதுக்குழு தான் முடிவெடுக்கும் எனத் தெரிவித்ததார். நில அபகரிப்பு வழக்கில் ஜாமீனில் உள்ள அவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கையெழுத்துபோட்டப் பிறகு இதனை தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அதிமுக ஒற்றைத் தலைமைக்கு பிள்ளையார் சுழிபோட்ட அமைச்சர் ஜெயக்குமார்


தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், " பலி வாங்கும் எண்ணம் காரணமாக மன உளைச்சலை ஏற்படுத்தி, அற்ப ஆசைக்காக என்னை கையெழுத்து போட வைக்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த ஸ்டேஷனில் கையெழுத்து போட சொன்னாலும் நான் கையெழுத்து போடுவேன். ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம், ஒற்றைத் தலைமை அவசியம் என்பது தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மூலம் பிரதிபலிக்க செய்துள்ளது.


தலைமை கழகத்தில் பேசப்பட்ட கருத்துகள் அடிப்படையில், இவர்தான் ஒற்றை, இவர்தான் தகுதி என நான் சொல்லவே இல்லை. பொதுக்குழு மட்டுமே எதையும் முடிவு செய்யும். நான் பொதுவானவன். எனக்கு கட்சி தான் முக்கியம். நான் கட்சிப்பக்கம். நான் பார்க்காத பதவியே இல்லை, மாவட்ட செயலாளர் முதல் மாணவர் அணி செயலாளர் என அனைத்தையும் பார்த்துள்ளேன். ஆட்சியில் இருந்த போது  மீன் வளத்துறை, பால் வளத்துறை என அனைத்தையும் பார்த்துள்ளேன். அம்மா மறைவுக்கு பிறகு, நிதி துறை என்னிடம் இருந்த போது யாருமே என்னிடம் எதையும் கேட்கவில்லை, அப்போது ஒரு பத்திரிக்கையாளர் என்னிடம் கேட்டார், OPS உங்களோடு இணைந்தால் நிதித்துறை பதவியை விட்டு தருவீர்களா? என கேட்ட பொது, தாராளமாக விட்டு தருகிறேன் என நான் சொன்னேன். இப்போது வரை  எனக்கு பதவி ஆசை இல்லை. 


மேலும், நாங்கள் வாழ்நாள் முழுவதும், திமுக என்ற தீய சக்தியை எதிர்ப்பது ஒரே கொள்கையாக கொண்டுள்ளோம்" எனக் கூறினார். ஓபிஎஸ்ஸூக்கு ஆதரவாக டிடிவி தினகரன் கருத்து தெரிவித்தது குறித்து பேசிய ஜெயக்குமார், ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக இருக்கிறது என்று டிடிவி தினகரனை விமர்சித்தார். மேலும், தினகரன் ஒரு அரசியல் வியாபாரி, அவருடைய மனசில் இருப்பது தான் அவர் கூறுவார் எனவும் ஜெயக்குமார் கடுமையாக விமர்ச்சித்தார். 


மேலும் படிக்க | ஒபிஎஸ்ஸூக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட கண்டிஷன் - பரபரக்கும் ஆலோசனைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR