புதுக்கோட்டை: கொரோனா காலத்தில் தடுப்பூசி நமக்கு துணை நின்றன என்றும், தடுப்பூசி குறித்து தற்போது வரும் தகவல்களால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “அதிமுக சார்பில் புதுக்கோட்டையில் 30 இடங்களில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக ஒரு இடத்தில் ஐஸ்கிரீம் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரம் பேருக்கு  விதவிதமான ஐஸ்கிரீம்கள் வழங்கப்பட்டு வருகின்றன.


சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிமுக நடத்தும் கோடை கால தண்ணீர் பந்தல் மட்டுமல்லாது ஐஸ்கிரீம் பந்தலிலும் தினந்தோறும் அதிகளவு மக்கள் வந்து தங்களுடைய தாகத்தை போக்கிக் கொள்கின்றனர். தமிழகத்தில் வெப்ப அலை வீசுகின்றது என்று ஏற்கனவே அரசுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தேன். ஹீட் ஸ்டோக் பாதிப்பு உயிர் இழப்பை கூட ஏற்படுத்தும். சென்னையில் அரசு கோடைகால வார்டு தொடங்கியிருப்பது வரவேற்க்க தக்கது, அதே போன்று அனைத்து மாவட்ட மருத்துவ கல்லூரிகளிலும் சிறப்பு வார்டுகளை  திறக்க வேண்டும். 


மேலும் படிக்க | திமுக அரசு மக்களின் கண்ணீரைத் துடைக்காமல் வரவழைக்கிறது - ஆர்பி உதயகுமார்!


எந்த தடுப்பு மருந்துகளும் பல கட்ட சோதனக்கு பின் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. கொரோனா தடுப்பு மருந்துகள் எல்லாம் இக்கட்டான கால கட்டத்தில்  நமக்கு துணை நின்றன. இந்த தடுப்பூசிகள் 10 லட்சம் பேரில் ஒருவருக்கு அரிதாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். இப்போது வரும் தகவல்களால் கொரோனா தடுப்பூசி குறித்து பெரிய அளவில் அச்சபட தேவையில்லை. 


எனினும் வல்லுநர் குழுவினர் இன்னும் கூடுதலான ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் சந்தேகத்தை போக்க வேண்டும். அரசு பொதுமக்களுக்கு கோடை காலங்களில் எது செய்ய வேண்டும் எது செய்யக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.” என்றார்.


மேலும் படிக்க | பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள் வழங்கியதில் முறைகேடுகள்: உயர் நீதி மன்றத்தில் வழக்கு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ