அதிமுக வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை கூடாது: வங்கிக்கு ஓபிஸ் கடிதம்
AIADMK OPS Letter to Bank: திமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் உள்ள தனது அனுமதியில்லாமல் வங்கி பரிவர்த்தனைகளை செய்யக்கூடாது என்று ஓபிஸ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளார்
சென்னை: அதிமுகவின் உட்கட்சி மோதலும், ஒற்றைத் தலைமைக்கான வாதங்களும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், வங்கியில் பண பரிவர்த்தனைகளை முடக்கும் வகையில் ஓபிஎஸ் கரூர் வைஸ்யா வங்கிக்கு கடிதம் எழுதி அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
தன்னுடைய அனுமதி இல்லாமல் வரவு செலவு கணக்குகளை யாருக்கும் வழங்க கூடாது என்றும் ஓ.பன்னீர் செல்வம் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைய விதிகளின் அடிப்படையில், இன்று வரை நானே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் உள்ளேன். என்னை கேட்காமல் எவ்வித வரவு செலவும் மேற்கொள்ள கூடாது என்று கரூர் வைஸ்யா வங்கிக்கு எழுதிய கடிதத்தில் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | தொடரும் வருமான வரி துறை சோதனை! மீண்டும் சிக்கிய எஸ்பி வேலுமணி!
அதிமுகவின் பதவிச் சண்டை தொடர்பாக பலரும் விமர்சித்து வரும் நிலையில், கட்சியின் முக்கிய பிரமுகரான கே.சி பழனிச்சாமி அதிமுக வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள் என தெரிவித்தார்.
ஒபிஎஸ் -ஈபிஎஸ் இருவருமே சுயநலத்த்ற்காக இவ்வளவு பெரிய மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும், கடந்த 4 ஆண்டு காலத்தில் தங்களுக்கு ஏற்றாற் போல் பல்வேறு திருத்தங்களை செய்து மாற்றி உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
தற்போது ஆளும் கட்சியை எதிர்த்து பேச கட்சியில் ஆள் இல்லை என கூறிய அவர், அதிமுகவில் ஏற்பட்ட பிளவு பாஜக மற்றும் திமுகவிற்க்கு உதவும் என கவலை தெரிவித்தார்.
மேலும் படிக்க | AIADMK General Council Meet: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR