Supreme Court Verdict On AIADMK: அதிமுக பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வழக்கில், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்ற தனிநீதிபதி ஜெயசந்திரன் பிறப்பித்தார். இதையடுத்து, இபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக செயல்படலாம் என்றும் கடந்த செப். 2ஆம் தேதி உத்தரவிட்டார்.


இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் உத்தரவை தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில்  ஓபிஎஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் மீது தொடர் விசாரணை நடைபெற்ற நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


மேலும் படிக்க | நீதிமன்றத்தில் ஆஜர் ஆன முக அழகிரி! விசாரணை 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!


இரு நீதிபதிகள் தீர்ப்பு


ஜூலை 11ஆம் தேதி அன்று நடைபெற்ற பொதுக்குழு சட்டத்திற்கு உட்பட்டு நடைபெற்றது என்றும், அதன் மீது எந்த விதமான உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை என்றும், தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுவதாகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோரின் இரு நீதிபதி அமர்வின் தீர்ப்பை அப்படியே ஏற்பதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர். 


தேர்தலுக்கு முன் தீர்ப்பு


இதையடுத்து, ஜூலை 11 ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இபிஎஸ் முகாமில் கொண்டாட்டம் நடைபெறுகிறது. ஓபிஎஸ் முகாம் வெறிச்சோடி காணப்படுகிறது. ராயப்பேட்டை அஇஅதிமுக அலுவலகத்தில் ஈபிஎஸ் கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி இபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பாக இத்தீர்ப்பு வெளிவந்துள்ளது, தேர்தல் களத்தில் தாக்கம் ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது. 


மேலும் படிக்க | "எங்களை சீண்டினால் வெடிகுண்டு வைப்போம்" -முன்னாள் ராணுவ வீரர் சர்ச்சைப் பேச்சு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ