அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று 9.30 மணிக்கு ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி  திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை இன்று நடத்த உள்ளது. 


ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் வகையில் ஜெயலலிதாவின் இருக்கை அரங்கில் வைக்கப்பட உள்ளது. 


பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று காலை 7 மணியளவில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு  பொதுகுழு நடக்கும் இடத்தை அடைந்தனர்.


இதனிடையே சசிகலா தான் அதிமுகவின்  பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அதிமுக முக்கிய நிர்வாகிகள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகின்றனர். 


பொதுக்குழு உறுப்பினர்கள் 2770 பேருக்கும், செயற்குழு உறுப்பினர்கள் 280 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அழைப்பு கடிதங்கள் அனைத்தும் மாவட்டச் செயலாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.


எனவே இன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.


வழக்கமாக டிசம்பர் மாத இறுதியில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்டுவது வழக்கம். எனவே இந்த ஆண்டும் டிசம்பர் இறுதியில் கூட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. 


இந்நிலையில் சசிகலாவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. வழக்கின் முடிவு வெளியானதும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளனர்.


ஜெயலலிதா உயிரோடு இருந்து பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்தால் எப்படிப்பட்ட போஸ்டர்கள், பேனர்கள் இருக்குமோ அப்படித்தான் இப்போதும் வைக்கப்பட்டுள்ளது. 


பொதுக்குழு கூட்ட உறுப்பினர்கள், சென்னைக்கு வந்த சொகுசு பஸ்களின் முன்புறமும் ஜெயலலிதா பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.