தமிழ்நாடு செய்திகள்: வரும் 18 ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் துவங்க இருக்கிற நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி செல்கிறார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசியல் வட்டாரத்தில் இந்த சந்திப்பு முக்கியமாக பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக மாவட்ட செயலாளர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி திடீர் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்திக்க இருப்பதால், அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ளது. மறுபுறம் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வரும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக பேச தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்கிறார் எனவும் ஒருதரப்பினர் கூறி வருகின்றனர்.


அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அக்கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் முழுமையாக பழனிசாமி வசம் வந்ததுள்ளது. எனவே நாடாளுமன்ற தேர்தல், தேர்தலுக்கான கூட்டணி, குறிப்பாக ஒரே நாடு ஒரே தேர்தல், முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் போன்றவற்றை குறித்து இந்த சந்திப்பில் பேசலாம் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க - திமுக ஒழிந்தால் தான் தமிழ்நாட்டில் டெங்கு ஒழியும் - சிவி சண்முகம்!


அடுத்த வாரம் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், அது குறித்த முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்றும், அதேபோல் கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து அவர்களுக்கான தொகுதி பங்கீடு முடிந்திருக்கிற நிலையில், தமிழகத்திலும் தொகுதி பங்கீடு குறித்து பேச வாய்ப்பு உள்ளதாக என்றும் கூறப்படுகிறது.


இந்திய அளவில் பல மாநிலங்களில் பாஜக தலைமையில் கூட்டணி கட்சிகள் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தமிழ்நாட்டை பொறுத்த வரை அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக அங்கம் வகிக்கிறது. ஆனால் தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை வந்ததில் இருந்தே அதிமுகவுடன் மோதல் போக்கை கைபிடித்து வருகிறார். அதிமுக மேலிடத்தில் எந்தவித பேச்சுவார்த்தைம் நடத்தாமல் தனக்கென தனி ரூட் போட்டு செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் பாஜக தன்னிச்சையாக செயல்படுவது அதிமுக விரும்பவில்லை. எனவே தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பற்றியும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவிடம் பேசலாம் எனவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க - ’அரைவேக்காட்டு விளக்கம்’ அண்ணாமலைக்கு வகுப்பெடுத்த சசிகாந்த் செந்தில்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ