அதிமுக தலைமை ஒரு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டது. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டப்பட உள்ளதாக கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில், அதிமுக-வின் பொன்விழாவை முன்னிட்டு ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டப்படும் என இருவரும் கூறியுள்ளனர்.


இதுமட்டுமல்லாமல், அதிமுக (AIADMK) பொன்விழா ஆண்டையொட்டி, கட்சி சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முன்னாள் தமிழக முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன் சிறப்பு லோகோ வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 



ALSO READ: சிறு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் - பட்டாசு தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: முதல்வர்


அதிமுக பொன்விழா ஆண்டை (Golden Jubilee) மேலும் சிறப்பிக்கும் வகையில், பல இடங்களில் சுவர் விளம்பரங்களும், இரட்டை இலை சின்னத்தை பிரதிபலிக்கும் வண்ண விளக்கு அலங்காரங்களும் அமைக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், கட்சியின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்காக பணிபுரியும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், கலைத்துறையினர் ஆகியோருக்கு இந்த ஆண்டுமுதல் சிறப்பு விருதுகள் வழங்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது. 


இது  தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆரம்ப கால உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்படும் என்றும், அதிமுகவில் பணியாற்றிய மூத்த உறுப்பினர்களுக்கு மரியாதை செய்யப்படும் என்றும், வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் (Tamil Nadu) கழக ஆட்சி மீண்டும் மலர்ந்து, மக்கள் துன்பங்கள் விலக்கப்பட்டு, அமைதியான தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என கழகத்தின் பொன்விழா ஆண்டில் சூளுரைத்து கழக பணிகளை தொடர்ந்து செய்வோம் என்றும் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


ALSO READ: நமக்கான காலம் நிச்சயம் வரும்; தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்- தேமுதிக 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR