நமக்கான காலம் நிச்சயம் வரும்; தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்- தேமுதிக

தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 14, 2021, 12:26 PM IST
நமக்கான காலம் நிச்சயம் வரும்; தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்- தேமுதிக title=

தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

தமிழகத்தின் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் (Local Rural Body Election) பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட தும்பேரி 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு முரசு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமதி செல்வி பழனிக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ALSO READ |  AIADMK vs PMK பிரேக் அப்! ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டி

இதேபோல் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேமுதிக வேட்பாளர்களின் வெற்றிக்காக அரும்பாடு பட்ட அனைத்து மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

 

 

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். அதிகார பலம், பண பலத்தை மீறி நாம் தேர்தல் களத்தில் நிற்கிறோம். உண்மை, நேர்மை, உழைப்பை மட்டுமே நம்பி நாம் தேர்தலை எதிர்கொண்டோம். நமக்கான காலம் நிச்சயம் வரும். அதுவரை கழக தொண்டர்கள் துவண்டு விடாமல் வெற்றியை நோக்கி அயராது பாடுபட வேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ALSO READ |  TN Local Body Election Results 2021 LIVE: திமுக தொடர்ந்து முன்னிலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News