சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் ஆடியோ போலியனாது என்று முன்னாள் அவர் விளக்கம் அளித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சசிகலாவுடன் அதிமுகவின்  முன்னாள் எம்பிகள், அமைச்சர்கள் என பலர் அவருடன் தொடர்ந்து உரையாடி வருவதாக செய்திகளும் ஆடியோக்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.


அந்த வரிசையில், மதுரை மாவட்ட அதிமுக முகமும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ செல்லூர் ராஜு (Sellur Raju), சசிகலாவின் தலைமையை தான் விருப்புவதாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 


இந்த நிலையில், சசிகலாவுக்கு தான் ஆதரவு தெரிவித்து பேசிய ஆடியோ பொய்யானது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கமளித்துள்ளார். 



தமிழகத்தில் நகர்ப்புற தேர்தல் வருவதை முன்னிட்டு அதிமுக கட்சியினரிடையே கலகத்தை ஏற்படுத்தும் நோக்கோடு இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கமளித்துள்ளார்.


அதில், சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோவில் உள்ள குரல் நான் இல்லை. எனக்கும் அந்த ஆடியோவிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை. அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களுடைய வளர்ச்சி பிடிக்காத சில சமூக விரோதிகளால் இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. 


இதுகுறித்து தலைமையில் கலந்தாலோசித்த பிறகு காவல் துறையில் புகார் அளிக்க முடிவு செய்திருக்கிறேன் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற தேர்தல் வருவதை முன்னிட்டு கட்சியினரிடையே கலகத்தை ஏற்படுத்தும் நோக்கோடுதான் இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது என்று கூறும் முன்னாள் அமைச்சர், மக்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயர் உள்ளதால் இது போன்ற பொய்ப் பிரச்சாரத்தை பரப்பி விடலாம் என சமூக விரோதிகள் முயற்சி செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.


மேலும், என்னை வைத்து கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. சசிகலா வருகையை குறித்து தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.


ALSO READ | சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா: ஓமிக்ரான் தொற்றா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR