எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு பெரும் சறுக்கலாக, சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.  அதிமுக-வில் ஜூன் 23 ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என தெரிவித்த உயர்நீதிமன்றம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.  எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலராக தேர்வு செய்தது செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தவிர, தனி கூட்டம் எதுவும் கூட்டம் கூட்டக் கூடாது என்றும் பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஜூலை 7 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவரது தரப்பில் உள்ள அனைவருக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.