விழுப்புரம் தொகுதி அதிமுக எம்பி ராஜேந்திரன் மறைவுக்கு பாமக நிறுவனம் ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விழுப்புரம் தொகுதி அதிமுக எம்பி ராஜேந்திரன் சென்ற கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச்சுவரில் மோதியது. இந்த விபத்தில் எம்பி ராஜேந்திரன் உயிரிழந்தார். இதனிடையே அதிமுக எம்பி ராஜேந்திரன் மறைவுக்கு பாமக நிறுவனம் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.


ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் செய்தியில்:-


அதிமுகவைச் சேர்ந்த விழுப்பும் மக்களவை உறுப்பினர் இராஜேந்திரன் திண்டிவனத்தில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி  அறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.


விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் இராஜேந்திரன் மிகவும் எளிமையானவர். அடித்தட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், அரசியலில் படிப்படியாக முன்னேறி வந்தார். விழுப்புரம் மாவட்ட ஊராட்சித் தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றவர்.


இராஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அதிமுகவினருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.