அண்ணாமலை அளித்திருக்கும் பேட்டி ஒன்று அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில் அவர் பேசும்போது, " தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழ்நாடுக்கு முதலிடம் என்று கூட சொல்வேன்" என தெரிவித்தார். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டது முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா என்பதால், அவரின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வரப்பில் டிம்பர் மரங்கள்... வயலில் பாரம்பரிய நெல் ரகங்கள்...வளம் தரும் விவசாயம்!


இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி தர்மத்தை துளியும் பின்பற்றாமல் அண்ணாமலை பேசிக் கொண்டிருப்பது அழகல்ல. இதனை அதிமுகவினர் இனியும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என்ற ஜெயக்குமார் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், " அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். கூட்டணி தர்மம் இல்லாமல் அண்ணாமலை செயல்படுவது கண்டிக்கத்தக்கது.  ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனுஷனை கடிக்கும் கதையாக அண்ணாமலை செயல்பட்டு கொண்டிருக்கிறார். அனைவரும் பாராட்டும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்க செயல். 


அண்ணாமலை வரலாறு தெரியாமல் கத்துக்குட்டி போல செயல்படுகிறார். அதிமுகவினர் கொதித்து போயுள்ளனர். அண்ணாமலை பொறுப்பேற்ற நாள் முதல் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி கொண்டு செயல்படுகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியிருப்பது அதிமுகவினரை கோபப்படுத்தியுள்ளது. அண்ணாமலையை அமித்ஷாவும் நட்டாவும் கண்டிக்க வேண்டும். கூட்டணியில் இருந்துகொண்டே விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது;சட்டமன்றத் தேர்தலில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற அதிமுகதான் காரணம். அண்ணாமலை விமர்சனம் தொடர்ந்தால் கூட்டணியில் விரிசல் ஏற்படும். விமர்சனம் தொடர்ந்தால் கூட்டணி மறுபரிசீலனை செய்யப்படும். மாநில பொறுப்புக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை" என கடுமையாக சாடியுள்ளார்.


மேலும் படிக்க | தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்கு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ