நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலையை தொடங்கிவிட்டன. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரையை தமிழகம் முழுவதும் தொடங்கிவிட்டார். ஆட்சியில் இருக்கும் திமுக கட்சிப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அண்மையில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், நாடும் நமதே நாற்பதும் நமதே என்ற முழக்கத்தை முன்வைத்ததுடன் அனைத்து பகுதிகளிலும் ஆட்சியின் நலத்திட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். பாமக என்எல்சி பிரச்சனையை கையில் எடுத்து தீவிரமான போராட்டத்தை கடைபிடித்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அதிமுக கூட்டணி அவசியமில்லை, தனித்தே சமக களம் காண தயார் - சரத்குமார்


அதேபோல் தான் எதிர்கட்சியாக இருக்கும் அதிமுகவும் தேர்தல் பணிகளை மதுரையில் நடைபெறும் மாநாடு மூலம் தொடங்க இருக்கிறது. இதற்காக அதிமுக ஆட்சியின்போது அமைச்சர்களாக இருந்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் மதுரையில் முகாமிட்டுள்ளனர். வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுகவின் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனையொட்டி கரூரில் அது தொடர்பான ஸ்டிக்கர் 100 ஆட்டோக்களில் ஒட்டும் பணியினை முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சின்னசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், மதுரையில் நடைபெறும் இந்த மாநாடு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றும், இந்த மாநாட்டில் கரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். அரசுப் பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு என்று வரைமுறை இருக்கிறது. ஆனால், அவற்றை எல்லாம் மீறி பேருந்து முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள் என குற்றம்சாட்டினார்.


பேருந்தில் சின்ன இடத்தில் அரசு போக்குவரத்து கழகம் என வெளியில் தெரிகிறது. காசு கொடுத்தால் எங்கு வேண்டும் என்றாலும் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வார்கள். பீர் கம்பெனி விளம்பர டி சர்ட் போட்டு கிரிக்கெட் பார்க்க வரும் அமைச்சர் உதயநிதி, அரசுப் பேருந்தில் பீர் விளம்பரம் போடாமல் இருப்பார்களா? என கேள்வி எழுப்பினார். மேலும், அந்த நிறுவனமே அவர்களுடையது தான் என்று குற்றச்சாட்டை முன்வைத்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழகத்தில் 24x7 மதுபானம் கிடைக்கிறது, வாழ்க திராவிட மாடல் ஆட்சி என்றார்.


மேலும் படிக்க | அண்ணாமலை டீமில் இருந்து விழுந்த அடுத்த விக்கெட் - மவுனம் கலைத்த திருச்சி சூர்யா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ