திமுகவின் முக்கிய முகமாக இருக்கும் திருச்சி சிவாவின் மகனான சூர்யா சிவா, தனக்கு அக்கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் கூறி கடந்த ஆண்டு மே மாதம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அப்போது முதல் பாஜகவின் சார்பில் ஊடகங்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த திருச்சி சூர்யா, அண்ணாமலையின் தீவிர விசுவாசியாகவும் தன்னைக் காட்டிக் கொண்டார். ஆனால் திருச்சி சூர்யாவின் செயல்பாடுகள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டே இருந்தது. இது குறித்து தமிழ்நாடு பாஜகவுக்குள்ளாகவே விவாதங்கள் எழத் தொடங்கியது. கடைசியில் பாஜகவின் பெண் நிர்வாகியான டெய்சியுடன் ஏற்பட்ட மோதல் ஆடியோவாக வெளியாகி பொதுவெளியில் சர்ச்சையானது.
மேலும் படிக்க | பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ’பாரத் ஜோடோ’ வலுக்கும் கூட்டணி கட்சிகளின் ‘கை’
இது தமிழ்நாடு பாஜகவுக்கும் சங்கடமான சூழலை ஏற்படுத்தியதால் திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீக்கப்பட்டார். இருப்பினும் வேறு எந்த கட்சிக்கும் செல்லலாமல் அமைதியாக இருந்த திருச்சி சூர்யா சிவா, பாஜகவின் தீவிர விசுவாசியாகவே தன்னை சமூகவலைதளங்களில் காட்டிக் கொண்டார். அவரை புகழ்ந்தும் பாராட்டியும் எழுதி வந்தார். மீண்டும் கட்சியில் தன்னை சேர்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து செயல்பட்டு வந்த சூர்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், பொறுத்தது போதும் என்ற மனநிலைக்கு வந்ததால், முதன்முறையாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் அவர்.
இது குறித்து டிவிட்டரில் திருச்சி சூர்யா எழுதியிருக்கும் பதிவில், " கட்சியை விட்டு வெளியில் வந்தாலும் அண்ணாமலை பற்றி நான் விமர்சனம் செய்யாமல் தான் இருந்தேன் வாழ்க்கையில் ஒரு விஷயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் நாம் உண்மையாக இருப்பதைவிட யாரிடம் உண்மையாக இருக்கிறோம் என்பது மிக முக்கியம். நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் முதலில் உணர வேண்டும் நான் அப்படிப்பட்ட ஒரு நபர் அண்ணாமலை என்று நினைத்தேன். ஆனால் அது பொய் என்று தெரிந்து விட்டது. கூடிய விரைவில் அவருடைய பொய் பிம்பம் உடையும்" என தெரிவித்துள்ளார்.
(@TrichySuriyaS) July 30, 2023
இவரின் இந்த பதிவை, அண்மையில் அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளை கூறிவிட்டு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சிடிஆர் நிர்மல் குமாரும் லைக் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் திருச்சி சூர்யா அண்ணாமலை மீது அதிருப்தியை வெளிக்காட்டியிருப்பது இன்னும் சில சர்ச்சைகள் தொடங்குவதற்கான முதல்புள்ளியாக பார்க்கப்படுகிறது. அவர் விரைவில் மவுனம் கலைத்து பல உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேசவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ