தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளில் ஓட்டுக்கு பணம் கொடுத்தல் மற்றும் பணப்புழக்கம் குற்றச்சாட்டு காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த 4 தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த ஓட்டு எண்ணிக்கையின் முடிவுகள் பிற்பகல் 12 மணிக்கு  வெளியாகிவிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.


ஒவ்வொரு தொகுதியிலும், 225 பணியாளர்கள், ஓட்டு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்பட உள்ளனர். அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றத்தில் அதிமுக முன்னிலை.  புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்வர நாராயணசாமி முன்னிலையில் உள்ளார். 


கடந்த 19-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் அதிகபட்சமாக அரவக்குறிச்சி 81.92 சதவீதமும், தஞ்சையில் 69.02 சதவீதமும், திருப்பரங்குன்றத்தில் 70.19 சதவீதமும், நெல்லித்தோப்பில் 85.52  சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.


இன்று காலை  காலை 8 மணி அளவில் ஓட்டு எண்ணிக்கை தெடங்கியது, மேலும் பிற்பகல் 12 மணிக்கு அனைத்து முடிவுகளும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.