அரியலூர் மாணவி அனிதா வீடியோ பதிவு சர்ச்சை, அதிமுக அமைச்சர் மீது மோசடி புகார்
நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா தற்போது அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற பொய் வீடியோவை வெளியிட்டதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீது போலீசில் புகார் கொடுக்கபட்டுள்ளது.
சென்னை: 2017-ம் ஆண்டு நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியவர் அரியலூர் மாணவி அனிதா. ஆனால் இவரை நீட் தேர்வு முறை தற்கொலை செய்ய வைத்தது. நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா தற்போது அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற பொய் வீடியோவை வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தல் (TN Assembly Election) வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக (AIADMK), திமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. டிவி சேனல்களில் வீடியோ மூலம் பிரச்சாரம், சமூக வலைதளங்கள், வீடு வீடாகச் சென்று நேரடி பிரச்சாரம், பொதுக் கூட்டங்கள், வாகனப் பிரச்சாரம் என தேர்தல் களம் காட்சியளிக்கிறது.
ALSO READ | உயிருள்ள வரை அரவக்குறிச்சி தொகுதி மக்களுடனான உறவு இருக்கும் : அண்ணாமலை
இந்நிலையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரும், அதிமுக எம்.எல்.ஏவுமான மாஃபா பாண்டியராஜன் (Mafoi Pandiarajan) தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், நீட் (NEET) தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதா, அதிமுகவை ஆதரிப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. 17 பேரின் வாழ்க்கையை நாசமாக்கின திமுகவை (DMK) மன்னித்து விடாதீர்கள் என்று பேசும் வகையில் டப்பிங் செய்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எனவே இறந்த அனிதாவை அவமதிக்கும் வகையிலும் கொச்சைப்படுத்தும் வகையிலும் வீடியோவை வெளியிட்ட பதிவுகளை கடும் எதிர்ப்பின் காரணமாக அமைச்சர் பாண்டியராஜன் நீக்கிவிட்டார். அமைச்சரின் இந்த பதிவை அடையாளமாக ஸ்கிரீன் ஷாட் எடுத்து போலீசில் புகார் கொடுத்திருக்கிறார் அனிதாவின் (Anitha) சகோதரர். இந்த விஷயத்தை தேர்தல் ஆணையம் கவனித்து அமைச்சருக்கு எதிராக உரிய நடவடிக்கை என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR