Chennai கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை மீண்டும் விசாரிக்கும் விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து, அதிமுக உறுப்பினர்கள், தாங்களாகவே வெளியே சென்றதாகவும், தான் அவர்களை வெளியேற்றவில்லை எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சட்டப் பேரவை பொது நிதிநிலை அறிக்கை கடந்த 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இன்று நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் மற்றும் பதிலுரை நடைப்பெற்றது. அப்போது அவையில் நேற்று நடைபெற்ற கொடநாடு விவகாரம் தொடர்பாக பேசிய துரைமுருகன்,  "கொடநாடு விவகாரத்தில் சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றம்" என தவறான வகையில் செய்தி வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.


இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, நேற்று அனுமதி பெறாமல் பேச முற்பட்ட போது எதிர்கட்சித்தலைவர் என்ற முறையில் அனுமதி வழங்கப்பட்டது என கூறினார்.  தனிப்பட்ட பிரச்சனையை அவையில் எழுப்பக்கூடாது, இருப்பினும் எதிர்கட்சித்தலைவருக்கு அனுமதி வழங்கப்பட்டது எனவும் தெரிவித்தார். சட்டப்பேரவை விதிகளின்படி ஏதேனும் ஒன்றை காட்சிப்பொருளாக காண்பிக்க வேண்டும் என்றால் சபாநாயகரின் அனுமதி பெற வேண்டும் என்றும், ஆனால் அனுமதி வாங்காமல் பதாகைகளை காண்பித்ததாகவும் குறிப்பிட்டார். அவையில் இருந்து தாங்களாகவே அதிமுக உறுப்பினர்கள் வெளியே சென்றதாகவும், தான் அவர்களை வெளியேற்ற வில்லை எனவும் சபாநாயகர் தெரிவித்தார். மக்கள் பிரச்சினையை பேசும் அவையில் தனிப்பட்ட பிரச்சினைகளை எழுப்பக்கூடாது. எனினும் அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையை பேச நான் அனுமதித்தேன்'' என அப்பாவு விளக்கமளித்தார்.


ALSO READ பிடிஆர் vs வானதி ஸ்ரீனிவாசன்: சட்டமன்றத்தில் நடந்த சுவாரசியமான கேள்வி பதில்கள்


இன்னிலையில் இன்று ஆளுநரை சந்தித்தப் பின் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ''ஊழல், வசூல் செய்தல், பழிவாங்குதல் என்ற அடிப்படையில் திமுக அரசு நடந்து கொள்கிறது. திமுக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது.  கடந்தகால ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை கிடப்பில் போட்டு முடக்கி வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ததுதான் திமுகவின் நூறு நாள் சாதனை. 
 
தேர்தல் அறிக்கைக்கும் கோடநாடு வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கோடநாடு வழக்கு நீதிமன்றத்தில் முடியும் தருவாயில் இருக்கும் நிலையில் பொய் குற்றச்சாட்டு கூறுகிறார்கள். கோடநாடு வழக்கில் குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் திமுக அரசு நடந்து கொள்கிறது '' என்று கூறினார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR