முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் அணி (அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா), சசிகலா அணி (அ.தி.மு.க. அம்மா) என இரு அணிகள் உதயமான நிலையில், மீண்டும் ஒன்றாக இணையும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடத்த சசிகலா அணி தரப்பில் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் 7 பேர் குழுவும், ஓ.பி.எஸ். அணி தரப்பில் முனுசாமி தலைமையில் 7 பேர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 


இந்த இரண்டு குழுக்களுக்  இன்று சந்தித்து இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள் என கூறபட்டது ஆனால் இந்த பேச்சு வார்த்தைக்கு தற்போது முட்டுக்கட்டை விழுந்து உள்ளது


ஓபிஎஸ் அணி சார்பில் முனுசாமி அளித்த பேட்டியில் கூறியது:-


ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணையும், சசிகலா நீக்கமும் எங்களின் முக்கிய நிபந்தனை. ஆனால் அந்த அணி தரப்பில் ஒவ்வொருவரும் ஒரு வித கருத்தை தெரிவித்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு, அந்த தரப்பு அணியை யாரோ வெளியில் இருந்து இயக்கு இயக்குகின்றனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது என கூறினார்.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வைத்திலிங்கம் நிருபர்களை சந்தித்து கூறியதாவது:-


அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு இப்போதே நிருபர்கள் மூலம் கேட்டு கொள்கிறேன். ஆனால் முனுசாமி அளித்த பேட்டியில் இரண்டு நிபந்தனை வைக்கிறார். ஜெயலலிதா  மரண குறித்த விசாரணை மற்றும் சசிகலா பொது செயலர் பதவி பறிப்பு ஆகியன. இரண்டும் முறையே கோர்ட் மற்றும் தேர்தல் கமிஷன் முன்பு உள்ளது. இதன் மூலம் வரும் முடிவின்படியே முடிவுகள் எடுக்கப்படும். 


பேச்சு வார்த்தைக்கு முன்பே நிபந்தனை வைத்தால் முட்டுக்கட்டை ஏற்படும். நிபந்தனை வைப்பதுடன், ஓ.பி.எஸ்., அணியினர் மாறி மாறி பேசி வருகின்றனர் என வைத்திலிங்கம் கூறினார்.