இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வரின் முடிவை ஏற்பதாக அனைத்து எம்எல்ஏக்களும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் ஆகஸ்ட் 21-ம் தேதி இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. இரு அணிகள் இணைந்த பிறகு முதல் முறையாக அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் கலந்துக்கொண்டனர். இந்த கூட்டத்தில் மொத்தம் 109 எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனர். 


அதிமுகவில் எந்த ஒரு முடிவையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே இறுதி செய்வார். அவர் எடுக்கும் முடிவுக்கு கட்சிகளில் உள்ள அனைவரும் கட்டுப்படுவோம். மேலும் சட்டசபை குழு தலைவராக பழனிசாமி தொடரலாம் போன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


தினகரனை அதரவு எம்.எல்.ஏ.க்கள் யாரும் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.