அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க ஒப்புதல் கடிதம் பெறுவதற்காகவே கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.


அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா கடந்த டிசம்பர் 31-ம் தேதி பொறுப்பேற்றார். அப்போதே கட்சியும், ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, சசிகலாவை முதல்வராக்கும் முயற்சி நடந்தது. ஆனால் அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. பின்னர் நடந்த அதிமுக இலக்கிய அணியினர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும் இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை


இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தலைமையின் இந்த திடீர் நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏக்களை சென்னையில் தங்கியிருக்குமாறு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. ஊருக்குச் சென்றவர்களை உடனடியாக சென்னைக்கு வருமாறும் கூறப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்று, விரைவில் சசிகலா முதல்வராக பொறுப்பேற்கவே இந்த நடவடிக்கை என கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. 


ஆனால் தொகுதிகளில் மக்கள் பிரச்சினைகள் தொடர்பான விவரங்கள் பெறவே தாங்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகிகளும் அழைக்கப் பட்டிருப்பதாகவும் எம்எல்ஏக்கள் கூறுகின்றனர்.