முல்லை பெரியாறு அணையில் நீர் தேக்குவது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சரான ஆர்.பி. உதயகுமார்,  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ரூர்கர்வ் அட்டவணைப்படி, நவம்பர் 30க்கு பின் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக தேக்கலாம் என்று கூறப்படும் நிலையில், ஓரிரு நாளிலே அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்ட உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே, நீர்மட்டத்தை 142 அடியாக தேக்க நடவடிக்கை எடுப்பதற்கும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெற்றுத் தந்த அந்த ஜீவாதார உரிமையை காப்பதற்கும் திமுக அரசு முன்வர வேண்டும். உச்ச நீதிமன்றம் அமைத்த கண்காணிப்பு குழுவினர் நாளைய (டிச. 4) தினம், அணைப்பகுதியில் ஆய்வு செய்வதாக தெரிவிக்கப்பட்ட நிலையிலே, அந்த ஆய்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது.


மதுரை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களிலேயே குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீர் ஆதாரமாக விளங்குவது, முல்லை பெரியார். முல்லைப் பெரியாறு அணை, 1895ஆம் ஆண்டு ஜான் பென்னிகுவிக் என்பவரால் கட்டப்பட்ட இந்த அணை 155 அடியாகும். 1979 ஆம் ஆண்டில் மரமத்து பணிகளுக்காக, அணையின் நீர்மட்டத்தை தற்காலிகமாக 136 அடியை குறைக்கபட்டது. 


1980ஆம் ஆண்டு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு முயற்சி செய்தபோது, கேரள அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. 2014ஆம் ஆண்டு இறுதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை உடனடியாக 142 அடி வரை உயர்த்தி கொள்ளலாம் என்று  விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கிற அந்த வரலாற்று தீர்ப்பை, ஜெயலலிதா பெற்று தந்ததற்காக மதுரையிலே நன்றி அறிவிப்பு மாநாடு நடந்தது.


மேலும் படிக்க | 4 பேருடன் திருமணம், மெசேஜ் மூலம் பண மோசடி: போலீசையே அதிர வைத்த பிளே கேர்ள்
zeenews.india.com/tamil/tamil-nadu/woman-marries-4-men-dupes-many-online-police-arrest-after-one-of-the-husbands-give-complaint-422331


2021ஆம் ஆண்ட கேரளா ரூல்கர்வ் புகுத்தி, 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அணையின் நீர்மட்டம் 142 அடியாராக உயர்ந்த போது கேரளா பகுதிகளுக்குகு நீர் திறக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 155 அடியாக இருந்த போதும், 104 அடிக்கு மேல் உள்ள நீரை மட்டுமே பயன்படுத்த முடியும். 


104 அடிக்கு கீழ் உள்ள நீரை தமிழக பகுதிக்கு திறக்க முடியாது. அந்த வகையிலே 155 அடி வரை அணையின் நீரை தேக்க்கும்போது எட்டு டிஎம்சி நீரும், 142 அடி வரை கேட்கிறபோதும் 6.5 டிஎம்சி நீரும் தமிழகத்திற்கு கிடைக்கும் 


ரூல்கர்வ் முறையால் தமிழகத்திற்கு தற்போது அஞ்சு டிஎம்சி நீர் மட்டுமே கிடைத்து வருகிறது .மேலும் பருவ மழை காலங்களில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய இரண்டு டிஎம்சி நீர் வீணாக கேரளா பகுதிக்கு சென்று கடலில் கலக்கிறது. இது நமக்கு கண்ணீரை வரவழைக்கிறது. 


நீர்மட்டம் 152 அடியாக இருந்தபோது தேனி ,மதுரை  திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்டு ஐந்து மாவட்டங்களில் நான்கு லட்சம் ஏக்கராக இருந்த பாசன பரப்பு தற்போது, மிகப்பெரிய வேதனையின் உச்சமாக 1.5 லட்சம் ஏக்கராக சுருங்கி இருக்கிறது.


கடந்த ஆண்டு நான்கு முறை அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வாய்ப்பு இருந்த பொழுதும்,  விடியா திமுக அரசு கேரளா அரசின்  அழுத்தத்திற்கு பயந்து 140 அடியை கட்டுவதற்கு முன்னரே கேரளாவிற்கு நீரை திறந்ந்துவிட்டது. சிவகங்கை இராமநாதபுரம் உள்ளிட்ட கடைமை பகுதிகளுக்கு முல்லைப் பெரியாறு அணையின் நீர் கிடைப்பது இல்லை அது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது 


பயிர்கள் காய்ந்து வரும் நிலையிலே முல்லைப் பெரியாறு அணையில் இருந்து, கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இரண்டு டிஎம்சி நீர் இடுக்கி அணைக்கு திருப்பிவிடப்பட்டு, அது வீணாக கடலில் கலக்கிற அந்த மிகப்பெரிய ஒரு வேதனையான செயல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


விவசாய சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நம்முடைய உரிமையை பறிக்கிற விதியாக இந்த விதியை அமைந்திருக்கிறது என்று விவசாய சங்கத்தினர் போராடினார்கள். இன்னும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.


ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை செய்ய வேண்டுமே, அந்த செயலை கேரளா செய்கிறார்கள். மக்களுக்கு பயனுள்ள இந்த முல்லைபெரியாரில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை,ராமநாதபுரம் உள்ளிப்ட சாமானிய மக்களுக்கும், விவசாய மக்களுக்கு குடிநீருக்கு விவசாயத்திற்கு ஆதாரமாக இருக்கிற அந்த நீர் ஆதாரத்தை வாழ்வாதாரத்தை கை வைக்கிற அந்த கொடுமையை நாம் எப்படி சகித்துக் கொள்வது .


தென் மாவட்ட விவசாயிகள் இன்றைக்கு கண்ணீரோடு, கவலையோடு அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜெயலலிதாவின் அரசு மூன்று முறை 142 அடியாக உயர்த்தி இருக்கிறது. தற்போது அதை நீர்மட்டம் 139.55 அடியாகவும், அனைத்து நீர்வரத்து வினாடிக்கு 2001 அடியாக உள்ளது. 


நீர்மட்டம் 140 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிற நிலையிலே, செப்டம்பர் 30க்கு பின்னர் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என ரூல் அட்டவணைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளதால், இப்போது அக்டோபர், நவம்பர், டிசம்பர் என்று மூன்று மாதம் ஆகிவிட்டது. எனவே, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக நிலைநாட்டி தமிழகத்தில் உரிமைகளை காக்க வேண்டும் என்பதை விவசாயத்தை கோரிக்கையாக இருக்கிறது.


முல்லைப் பெரியாரின் கண்காணிப்பு குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன் ராஜ், தமிழக பிரதிநிதியாக பொது பணித்துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சனா,  கேரள மாநிலம் சார்பாக மாநில நிர்வாக துறை கூடுதல் தலைமை செயலாளர் டி.கே.ஜோஸ், காவேரி தொழில்நுட்ப குழுவ தலைவராக சுப்ரமணியம்,  கேரள மாநில நீர் பாசன துறையின் நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகியோர் கடைசியாக கண்காணிப்பு குழுவினரை இந்த ஆண்டு மே ஒன்பதாம் தேதி முல்லை பெரியாரின் ஆய்வு நடத்தினார். 


நாளை நடைபெறும் ஆய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விளக்கத்தை விவசாயிகளுக்கு தெரிவிக்க முதலமைச்சர் முன் வருவாரா?. தென் மாவட்ட மக்கள் நலன் குறித்து முல்லைப் பெரியாருக்கு எடப்பாடி பழனிசாமி எடுத்து வைக்கும் கோரிக்கைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க முன் வருவாரா" என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.https://zeenews.india.com/tamil/topics/MK-Stalin


மேலும் படிக்க | மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ