திமுக முக்கிய புள்ளிகளை தூக்க எடப்பாடி கொடுத்திருக்கும் அசைன்மென்ட் - செல்லூர் ராஜூ ஓபன்டாக்
திமுகவின் முக்கிய புள்ளிகளை தூக்க அதிமுக மூத்த தலைவர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாநாட்டை சிறப்பாக நடத்திய அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்த எடப்பாடி, நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுமாறு உத்தரவிட்டுள்ளார். கட்சியில் புது உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், புதியவர்களுக்கு பொறுப்புகளை வழங்க வேண்டும் என கூறியிருக்கும் அவர், திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை அதிமுகவில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதனை அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செல்லூர் ராஜூ சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.
மேலும் படிக்க | “விஜய்ன்னு சொல்லாதீங்க..தளபதின்னு சொல்லுங்க..” புஸ்ஸி ஆனந்த் அட்வைஸ்..!
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கும்போது பேசிய செல்லூர் ராஜூ," நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்களை வழங்கினார். புதிய உறுப்பினர்களை சேர்க்க அறிவுறுத்தினார். புதியவர்களுக்கு பொறுப்பு வழங்குமாறு அறிவுறுத்தினார். பூத் கமிட்டி மற்றும் பெண்களை அதிகளவில் கட்சியில் சேர்க்குமாறு கூறியிருக்கிறார். பாரத், இந்தியா என எல்லாம் ஒன்று தான். எனக்கு இந்தியா தான் பிடிக்கும். மாவட்ட செயலாளர்களுக்கு இப்போது எடப்பாடி பழனிசாமி பூஸ்ட் கொடுத்திருக்கிறார். கட்சியில் முக்கிய நிர்வாகிகளை மாற்றுக்கட்சியில் இருந்து சேர்க்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.
மாற்று கட்சி முக்கிய நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து வந்து அதிமுகவில் இணைக்குமாறும் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் இதனை செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார். அவரின் இந்த அறிவுறுத்தல்கள் எல்லாம் எங்களுக்கு புது உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அம்மா எப்படி கட்சி பணி சிறப்பாக ஆற்றுபவர்களை வாழ்த்துவார்களோ அதேபோல் அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் கட்சி பணியாற்றியவர்களை அழைத்து பாராட்டியிருக்கிறார். இது நிர்வாகிகள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது" என தெரிவித்தார். அதேபோல் அதிமுக எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ