புதுடெல்லி: மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்தல் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு ஜூலை 1 ஆம் தேதி துவங்கியது. வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஜூலை 11.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இருந்து 6 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. அதாவது தமிழக சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் அதிமுகவுக்கு 3 இடங்களும், திமுகவுக்கு 3 இடங்களும் கிடைக்கும். ஒரு மாநிலங்களவை எம்.பி.யைத் தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. எனவே இந்த ஆறு எம்.பி.க்களையும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் எனத்தெரிகிறது.


திமுகவைப் பொறுத்தவரை ஒரு இடம் மதிமுகவுக்கு, மற்ற இரண்டு இடங்கள் தங்கள் கட்சி உறுப்பினருக்கும் ஒதுக்கி உள்ளது. அந்தவகையில், தொமுசவின் பொதுச்செயலாளரான சண்முகம் மற்றும் மூத்த வழக்க்றிஞர் வில்சன் ஆகியோ திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். மதிமுக சார்பில் வைகோ நிற்பார் எனவும் முடிவுசெய்யப்பட்டு உள்ளது. 


திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், இன்னும் ஆளும் கட்சியான அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. என்ன தான் அதிமுக கட்சியில் நடக்கிறது என்று விசாரித்த போது, நமக்கு கிடைத்த தகவலின் படி பார்த்தால், இந்த விவகாரத்திலும் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே ஒத்த கருத்து ஏற்ப்படாதது தான் காரணம் எனத் தகவல் கிடைத்தது.


அதிமுகவுக்கு கிடைக்கும் மூன்று இடங்களில் ஒரு இடம் பாமவுக்கு என்கிற முடிவில் அதிமுக உறுதியாக உள்ளது. ஏனென்றால் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளதால், அவர்களுடன் சுமூகமாக செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் சீட் ஒதுக்கப்பட்டு உள்ளது. 


மீதமுள்ள இரண்டு இடங்களில் யாரை நிறுத்துவது என முடிவெடுப்பதில் தான் அதிமுகவில் இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது. கரூர் நாடாளுமன்ற தொகுதியில் தோல்வி அடைந்த தம்பிதுரையை வேட்பாளராகும் முயற்சில் எடப்பாடி பழனிசாமி தரப்பி ஈடுபட்டு வருகிறார். அதேவேளையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த கே.பி.முனுசாமியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. தம்பிதுரையை அனுப்பினால் பாஜகவை விமர்சிக்க சரியாக இருப்பார் என்று ஈபிஎஸ் நினைக்கிறார். கே.பி.முனுசாமியை அனுப்பினால் தனது மகனுக்கு (ரவீந்திரநாத்) துணையாக இருப்பார் என்று ஓபிஎஸ் நினைக்கிறார். இதனால் மாநிலங்களவைக்கு யாரை அனுப்பவது என்ற குழப்பம் அதிமுகவில் நீடித்து வருகிறது. 


ஏற்கனவே சிறுபான்மையினருக்கு மாநிலங்களவையில் இடம் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று அன்வர் ராஜா, முதல்வர் எடப்படிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையில் முன்னாள் எம்.பி வேணுகோபால் மற்றும் அன்வர் ராஜா ஆகிய இருவரும் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது மாநிலங்களவையில் தங்களுக்கு சீட் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமில்லாம் பாஜக தரப்பில் இருந்து மைத்ரேயனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.


மாநிலங்களவை உள்ள இரண்டு இடத்தைப் பிடிக்க தம்பிதுரை, கே.பி. முனுசாமி, அன்வர்ராஜா, மைத்ரேயன், தமிழ்மகன் உசேன் உட்பட பலரும் வாய்ப்பு கேட்டி வருவதால் யாருக்கு சீட்டுகளை ஒதுக்குவது என்பதில் அதிமுக தலைமை குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளதால், விரைவில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.