கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு பொதுக்கூட்டம் கும்பகோணம் அருகே திருபுவனத்தில் நடைபெற்றது. இதில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  காமராஜர் முதன்முதலாக குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவருக்கு பக்கபலமாக ஆதரவு அளித்தது திமுக. சாஸ்த்திரி மறைவுக்குப் பின் காமராஜர் தனக்கு பிரதமர் பதவி வேண்டாம் என கூறிவிட்டார். அடுத்த பிரதமர் இந்திராவா? மொரார்ஜி தேசாயா? என கேள்வி எழுந்தது. அப்போது காமராஜர், இந்திரா தான் பிரதமராக வரவேண்டும் என தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | செந்தில் பாலாஜியை பாஜகவிற்கு அழைக்கிறார் அண்ணாமலை: திமுக எம்.பி செந்தில்குமார் பளீர்


அப்போது காங்கிரஸ் கட்சிக்கு அபரிமிதமான எம்பிகள் இருந்தனர். திமுகவிற்கு வெறும் 8 MP க்கள் மட்டும் இருந்தனர். இந்த எட்டு எம்பிக்களை வைத்துக் கொண்டு காமராஜர் பிரதமர் ஆவதை திமுக தடுத்தது என அமித்ஷா பச்சை பொய் கூறுகிறார். அமித்ஷாவிற்கு திமுக மேல் ஏன் கோபம்?. அவசர நிலை அமல்படுத்தப்பட்டபோது இந்தியாவில் பல்வேறு கட்சிகள் காணாமல் போனது. பிஜேபிக்கு பழைய பெயர் ஜன சங்கம். அவசரநிலை காலத்தில் ஜன சங்கம்  கட்சியை கலைத்த தைரியசாலிகள் இவர்கள்.


திமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை எதற்காகவும் தனது பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் திமுகவை அழிக்க முடியாது. நெடுஞ்சாலைத் துறையில் 4000 கோடி ரூபாய் அளவிற்கு எடப்பாடி பழனிச்சாமி முறைகேடு செய்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் இது விசாரிக்கப்படும். செப்டம்பர் மாதம் குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கப்பட உள்ளது.


அதன்பின் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அனைவர் மீதும் உள்ள வழக்குகள் விசாரணைக்கு வரும். அப்போது அண்ணா திமுக-வின் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் தேர்தலில் போட்டி போட முடியாத அளவிற்கு நிலைமை ஏற்படும். இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருவிடைமருதூர் ராமலிங்கம், அரசு கொறடா கோவி.செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் படிக்க | அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவது எப்போது? ​அறிவிப்பு இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ