முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் செப்.29ஆம் தேதி, மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் , முன்னாள் அமைச்சரும், மதுரை தெற்கு மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ பங்கேற்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆலோசனைக் கூட்டத்திற்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"கடந்த ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய குற்றச்சாட்டு, நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து நிச்சியமாக விலக தயார்.கூட்டுறவுத் துறையில் முறைக்கேடு நிரூபிக்கப்படவில்லை என்றால் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசியலில் இருந்து விலகி கொள்ள தயாரா?" என கேள்வி எழுப்பினார். 


மேலும் படிக்க | ஆ.ராசாவை கண்டிக்க ஸ்டாலின் பயப்படுகிறார் - செல்லூர் ராஜூ தடலாடி


தொடர்ந்து பேசிய அவர்,"கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பரிந்துரையில் நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், எப்படி தகுதி இல்லாதவர்களுக்கு தள்ளுபடி செய்ய முடியும். அதிமுக ஆட்சியில் கலங்கம் இல்லாமல் கூட்டுறவுத் துறை செயல்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையில் சிறப்பாக செயல்பட்டமைக்கு அதிமுக ஆட்சியில் மத்திய அரசு வழங்கிய 27 விருதுகளை தமிழ்நாடு அரசு சார்பில் நாங்கள் பெற்றுள்ளோம்.


அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் ஊழல் நடந்துள்ளதை நிரூபிக்க அவர் தயராக இருக்க வேண்டும். நிதி அமைச்சருக்கான தகுதி இல்லாத நபரை நிதி அமைச்சராக திமுக நியமித்துள்ளது. தமிழகத்தில் வரி உயர்வுக்கு காரணமே நிதி அமைச்சர் மட்டுமே. இல்லாததை சொல்லி அரசு மீது வெறுப்புணர்வு ஏற்பட நிதி அமைச்சர்தான் காரணம். 48 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக கூறிவிட்டு 13 லட்சம் பேருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யபட்டுள்ளது" என பேசினார் .


மேலும் படிக்க | ஸ்டாலின் எல்லோருக்கும் அல்வா கொடுத்துவிட்டார் - செல்லூர் ராஜூ பேச்சு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ