சென்னை: கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, மக்களது வாழ்க்கை சம்பந்தமான ஒவ்வொரு துறையிலும் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பெருந்தொற்றால், வெகுவாக பாதிப்புக்குள்ளான துறைகளில் கல்வித் துறையும் ஒன்றாகும். தமிழகத்திலும் பள்ளிகளும் கல்லூரிகளும் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் உள்ளன. தற்போது இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.


கொரோனா பெருந்தொற்று (Coronavirus) காரணமாக +2 பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. மதிப்பெண் வழங்குவதற்கான நெறிமுறைகளை அரசாங்கத்தால் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் பள்ளிகள் மதிப்பெண் சான்றிதழ்களை தயார் செய்து வருகின்றன. 


பள்ளிகள் வழங்கவிருக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை இருக்கும். ஆகையால், இந்த மதிப்பெண்கள் எப்போது வழங்கப்படும் என மாணவர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். 


இந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை வருகிற அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) தெரிவித்துள்ளது. மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி முதல் தொடங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  


ALSO READ:JEE Main தேர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்பு: தேசிய தேர்வு முகமை


ஜூலை மாத இறுதிக்குள் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே கூறியிருந்தார். 


அதன் அடிப்படையில், பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  இதற்கிடையில், பொறியியல் உள்பட தொழில்நுட்ப கல்விக்கான மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு குறித்த அட்டவணையை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) வெளியிட்டு இருக்கிறது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் உறுப்பினர் செயலர் ராஜீவி குமார் இது குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “ என்ஜினீயரிங் உள்பட தொழில்நுட்ப படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் முடித்து, மாணவர் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும். முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர, பிற மாணவர்களுக்கான வகுப்புகள் அக்டோபர் 1 ஆம் தேதி துவக்கப்பட வேண்டும்.


அதேபோல், 2 ஆம் கட்ட கலந்தாய்வு வருகிற அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் முடித்து, மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். தொழில்நுட்ப படிப்புகள் சேர்க்கை பெற்று, சேர விருப்பம் இல்லாதவர்கள் தாங்கள் கட்டிய முழுப்பணத்துடன் அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை பொறுத்தவரையில் வருகிற அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி முதல் தொடங்கப்பட வேண்டும். 2 ஆம் ஆண்டு படிப்புகளில் நேரடி சேர்க்கையை அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.


இதற்கிடையில், அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வான ஜெ.இ.இ. தேர்வுகளின் மீதமுள்ள இரு பதிப்புகளுக்கான தேர்வு அட்டவணையையும் தேசிய தேர்வு முகமை (NTA) சமீபத்தில் வெள்யிட்டது. நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடக்கும் என்றும் தேசிய தேர்வு முகமை ஜூலை 12 ஆம் தேதி அறிவித்தது.


ALSO READ: NEET 2021 செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும்: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR