மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் மதுரையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தோப்பூரில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இந்தியாவில் மொத்தம் 14 இடங்களில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.


இந்நிலையில் தற்போது மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மதுரையைச் சேர்ந்த ஹக்கிம் என்பவர் மத்திய அரசிடம் ஆர்டிஐ மூலம் பல்வேறு கேள்விகள் கேட்டுள்ளார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை, மதுரையில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அதற்காக இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. 2014 ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் இதுவரை நாடு முழுவதும் 14 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். என்று கூறியுள்ளார்.