தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு மறுத்து விட்டதாக சட்டப்சபையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டாவது நாளான இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து அமைச்சர்களுக்குள் ஒற்றுமை இல்லையா? என்று திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்.


அதற்குப் பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேர்வு செய்த இடத்தை மத்திய அரசு மறுத்துவிட்டது.


மேலும் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 இடங்களை தேர்வு செய்து அது பற்றிய விபரங்களை, மத்திய அரசுக்கு அனுப்பிள்ளோம். இவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் அமைக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றார்.


அரசு தேர்வு செய்த எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தாலும் எங்களுக்கு சந்தோஷம்தான் என்று அமைச்சர் விஜயபாஸ்கரும் கூறினார்.


எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மதுரையில் உள்ள தோப்பூர், ஈரோட்டில் உள்ள பெருந்துறை, காஞ்சிபுரத்தில் உள்ள செங்கல்பட்டு, தஞ்சையில் உள்ள செங்கிப்பட்டி, புதுக்கோட்டை என ஐந்து இடங்கள் தான் தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.