காற்றின் மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் மழை தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெப்பச்சலனத்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டிவனம், விருதநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதிகளில் தலா 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.பள்ளிப்பட்டு - 6 செ.மீ., ஆண்டிப்பட்டி, போச்சம்பள்ளி, பென்னாகரம் பகுதிகளில் தலா 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, பெசன்ட் நகரில் கனமழை பெய்து வருகிறது. அடையாறு, அயனாவரம்,சூளைமேடு, கோடம்பாக்கம், கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்யும் என சென்னியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.