உலக புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி துவங்க உள்ளது. தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவா ராவ் ஆகியோரின் மத்தியில் உறுதிமொழிகள் ஏற்க்கப்பட்டது. இதையடுத்து, காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு துவங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஆயிரத்திற்கு மேற்பட்ட காளைகள், 1241 வீரர்களுக்கு டோக்கன் தரப்பட்டுள்ளது. காளை, வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சை தர மருத்துவக் குழு தயார்நிலையில் உள்ளது. 7 கிராமத்து மரியாதைக் காளைகள் முதலில் களத்தில் இறக்கி விடப்பட்டன. 


மாடுபிடி வீரர்களுக்கு முதலைச்சர் பரிசுகளை வாரி வழங்குகிறார். வீரர்களுக்கு கார் மற்றும் தங்க காசு பரிசு. வாடிவாசலில் சீறிபாய்து வரும் காளைகள்.