அதிர்ச்சித் தகவல்: தமிழகத்தில் குழந்தைகள் இடையில் வேகமாக பரவுகிறதா கொரோனா?
தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
நாடு முழுவதும் மக்களை அச்சத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்ற கொரோனா இரண்டாம் அலை படிப்படியாக குறையத் தொடங்கியது. எனினும், தற்போது நாட்டின் பல்வேறு இடங்களில் ஒரு நாள் எண்ணிக்கையின் அளவு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில், தமிழகத்தில் (Tamil Nadu) குழந்தைகள் இடையில் கொரோனா பாதிப்பின் அளவு 10 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் 6 சதவிகிதமாக இருந்த குழந்தைகளின் தொற்று எண்ணிக்கை தற்போது சுமார் 10 சதவிகிதமாக உள்ளது.
காரணம் இதுதானா?
தமிழகத்தில் இரண்டாவது அலையின் சீற்றம் குறைந்தவுடனேயே மக்கள் போக்கில் மாற்றத்தைக் காண முடிந்தது. கொரோனாவின் (Coronavirus) முக்கிய நெறிமுறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மறக்கப்பட்டன. இது குழந்தைகளிடையே தொற்றின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு முக்கிய காரணமாக பார்க்கபட்டுகிறது.
ALSO READ:பொதுச் சொத்துக்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
குழந்தைகளுக்கான தடுப்பூசி
இந்தியாவைப் பொறுத்த வரை, தடுப்பூசி செயல்முறை வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு மிக விரைவாகவும், முறையாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும், குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் இன்னும் பயன்பாட்டில் வராததால், அவர்களுக்கான ஆபத்து இன்னும் நீங்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.
மேலும், தற்போது சில வகுப்புகளுக்கு பள்ளிகளும் திறந்துவிட்ட நிலையில், தொற்றின் இந்த திடீர் அதிகரிப்பை கட்டுக்குள் கொண்டு வரவேண்டியது மிக அவசியமாகும். பள்ளிகள் திறந்த பிறகு தொற்று பரவாமல் இருக்க, பள்ளிகளுக்கான போதுமான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கான பாதிப்பு அதிகம் இருக்கும் என ஏற்கனவே நிபுணர்கள் கணித்திருந்ததால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது. மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான பிரத்யேக படுக்கைகளும், ஐ.சி.யு படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ALSO READ: TN corona update District Wise செப்டம்பர் 01: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR