உலகத்தை உலுக்கிப் போட்ட கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல குறைந்து வருகிறது. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதற்கிடையில் மக்களின் அஜாக்கிரதையும் அதிகரித்துள்ளது என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், தமிழகத்தில் (Tamil Nadu) கொரோனா தொற்றின் நிலை பற்றியும், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தமிழக சுகாதாரச் செயலர் அனைத்து ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு செய்தி அனுப்பியுள்ளார்.


ஆட்சியர்கள் மற்றும் ஜி.சி.சி-க்கான செய்தியில், “தமிழகத்தில் நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு 1500 என இருந்த தொற்றின் அளவு, 1600 ஆக உயரும் நிலையில் உள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட் ஆட்சியர்களும் சென்னை மாநகராட்சியும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், வார நாட்களில் செய்யப்பட்ட பரிசோதனைகளின் விளைவால் முன்னர் வார நாட்களில் அதிக தொற்று கண்டறியப்பட்டது. ஆனால், தற்போது தொற்றில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு நோய்த்தொற்றின் நேர்மறை விகிதத்தோடு தொடர்புகொண்டுள்ளது.


ALSO READ: 1 கோடி டோஸ் கூடுதல் தடுப்பூசிகள் தேவை: மத்திய அமைச்சருக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்


தடுப்பூசி செயல்முறை மூலம் அதிகப்படியான மக்களுக்கு தடுப்பூசி (Vaccination) செலுத்தப்படும் வரை, கூட்டம் கூடும் இடங்களில் சரியான கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கோவிட் நெறிமுறைகளை கடைபிடித்தல், கோவிட் கிளஸ்டர்கள் உருவாகும் இடங்களில் நேர்த்தியான தொடர்பறிதல் ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.


அதேபோல் அதிகமாக பொது இடங்களுக்கு செல்லாதவர்களிடம் நோய்த்தடுப்பு சக்தியை உருவாக்க அதிகபட்ச நபர்களுக்கு தடுப்பூசி போடுவது முக்கியமாகும்.


தயவுசெய்து மெகா முகாம் நடக்கும் நாட்களிலும் வழக்கமான நாட்களிலும் தடுப்பூசி செயல்முறையை துரிதப்படுத்தவும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும். இரண்டாவது டொஸ் செலுத்தப்பட வேண்டியவர்களுக்கும் தடுப்பூசிகள் விரைவாக செலுத்தப்பட வேண்டும். பொது சுகாதாரம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு, நெரிசலான இடங்களிலும், கொரோனா (Coronavirus) கிளஸ்டர்கள் ஏற்பட்ட சூழலிலும் நேர்த்தியான தொடர்புத் தடமறிதல் நடவடிக்கைகள் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ALSO READ: COVID-19 Update: இன்று 1,596 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 21 பேர் உயிரிழப்பு


ALSO READ: 7th Pay Commission: அகவிலைப்படியுடன் இதுவும் அதிகரிப்பதால் ஊதியத்தில் சூப்பர் ஏற்றம்!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR