வாகன ஓட்டிகளே உசார்! பல இடங்களில் மழையால் போக்குவரத்து பாதிப்பு!
இரவு முழுவதும் பெய்த மழையால் காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் முடிவுற்ற நிலையிலும், கோடை வெப்பத்தின் தாக்கம் குறையாமல் இருந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜூன் 18-ஆம் தேதி முதல் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. சென்னை வானிலை மையம் அறிவிப்பின் படி நேற்று காலை முதலே லேசான மேகமூட்டம் காணப்பட்டு லேசாக மழை பெய்த நிலையில், வானிலை மையம் அறிவிப்பு படி இன்று அதிகாலை நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பள்ளிகள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய மழை வந்தது. காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், உத்தரமேரூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதி, இருப்பினும் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் படிக்க | இன்று மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
குறிப்பாக நேற்று இரவு முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன் படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரத்தில் 25.80 மில்லி மீட்டர் மழையும்,வாலாஜாபாத்தில் 36.50 மில்லி மீட்டர் மழையும், உத்திரமேரூரில் 17.00 மில்லி மீட்டர் மழையும்,ஸ்ரீபெரும்புதூரில் 45.00 மில்லி மீட்டர் மழையும்,குன்றத்தூரில் 88.20 மில்லி மீட்டர் மழையும், செம்பரம்பாக்கத்தில் 107.00 மில்லி மீட்டர் மழையும் என ஒட்டுமொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 319.50 மில்லி மீட்டர் மழை நேற்று இரவு முதல் இன்று காலை வரை பதிவாகியுள்ளது. இந்நிலையில் தொடர் மழையில் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட அட்சியர் கலைச்செல்வி மோகன் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளர்.
காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் நுழைவாயிலில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகனம் ஓட்டிகளும் ரயில் பயணிகளும் கடுமையாக அவதியுற்றுள்ளனர். குறிப்பாக திங்கட்கிழமை வேலை நாளான இன்று பல்வேறு பணிகளுக்கு அதிகாலை நேரத்தில் வெளியில் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மழையில் நனைந்தவாறு சென்று அவதிப்பட்டு வருகின்றனர். இருப்பினும் சூட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது மழை பெய்து குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏரிகள் நிலவரம்
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 133 ஏரிகள் 75%-100% , 335 ஏரிகள் 50%-75%, 331 ஏரிகள் 25%-50%, 109 ஏரிகள் 25% கீழ் நிறைந்துள்ளதாக பொது துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல போதிய இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுவாக ஜூன் மாதங்களில் வேலூர் மாவட்டத்திற்கு மழை பொழிவு இல்லாத பட்சத்தில் தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாகவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் பருவம் மாறி மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அதிக கன மழை பெய்து வரும் சூழலில் வேலூர் மாவட்டத்தில் மிதமான மழைப்பதிவு பதிவாகியுள்ளது. மேலும் இது நாளை வரை இந்த மழை பொழிவு இருக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | நீட் தேர்வு ரத்து: அரசுக்கு கோரிக்கை வைக்கும் ஓபிஎஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ