Indian Railways மாஸ் அப்டேட்: ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி.. மிகப்பெரிய நிவாரணம்!!

Indian Railways: ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே அவ்வப்போது பல புதிய விதிமுறைகளை வகுக்கின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 16, 2023, 03:25 PM IST
  • முன்பு ரயிலில் செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்வதில் பல சிக்கல்கள் இருந்தன.
  • ஆனால், தற்போது இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
  • செல்ல நாய்கள் அல்லது பூனைகளை ரயிலில் எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லலாம் என்ற புதிய விதியை ரயில்வே அமைச்சகம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Indian Railways மாஸ் அப்டேட்: ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி.. மிகப்பெரிய நிவாரணம்!! title=

இந்திய ரயில்வே: தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். ரயில் பயணம் ஒரு சுகமான பயணமாக கருதப்படுகின்றது. அதுவுன் நீண்ட தூர ரயில் பயணங்கள் பலரால் மிகவும் விரும்பப்படுகின்றன. ரயிலில் பயணம் செய்வதற்கும் சில விதிகள் உள்ளன. ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே அவ்வப்போது பல புதிய விதிமுறைகளை வகுக்கின்றது, பழைய விதிமுறைகளை மாற்றுகின்றது. 

செல்லப்பிராணிகள்

உங்களிடம் செல்லப்பிராணிகள் இருந்தால், முன்பு ரயிலில் செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்வதில் பல சிக்கல்கள் இருந்தன. ஆனால், தற்போது இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ரயில் பயணச்சீட்டு

செல்ல நாய்கள் அல்லது பூனைகளை ரயிலில் எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லலாம் என்ற புதிய விதியை ரயில்வே அமைச்சகம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) செல்லப்பிராணிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவை அனுமதிக்கக்கூடும். முன்னதாக, செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்ல, செலப்பிராணிகளின் உரிமையாளர், பயண நாளில் பிளாட்பாரத்தில் உள்ள பார்சல் முன்பதிவு கவுண்டருக்குச் சென்று, முதல் வகுப்பு ஏசி டிக்கெட், கேபின் அல்லது கூபேவை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். இப்போது இது மாற்றப்படும் என தெரிகிறது.

ரயில்வே அமைச்சகம்

பயணிகள் தங்கள் செல்லப்பிராணிகளை இரண்டாம் வகுப்பு சாமான்கள் மற்றும் பிரேக் வேனில் ஒரு பெட்டியில் கொண்டு செல்ல முன்பு அனுமதிக்கப்படவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண, செல்லப்பிராணிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவை துவக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ஏசி-1 வகுப்பு ரயில்களில் செல்லப்பிராணிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு வசதியை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இந்த முன்மொழிவில், செல்லப்பிராணிகளை ரயிலில் பதிவு செய்யும் அதிகாரத்தை TTE -க்கு வழங்குவதற்கான திட்டமும் அடங்கும்.

ரயில்வே வாரியம்

இதன் மூலம் செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்வது பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் விலங்குகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியைத் தொடங்கும் வகையில், மென்பொருளில் மாற்றங்களைச் செய்யுமாறு ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்தை (சிஆர்ஐஎஸ்) ரயில்வே வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரயில் பயணிகள் கவனத்திற்கு! மேலும் 5 புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்..!

ரயில் பயணி

ஆன்லைன் சேவையின் மூலம், ரயில் பயணிகள் ரயிலின் முதல் சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு, ஐஆர்சிடிசி இணையதளத்தில் தங்கள் மொபைல் அல்லது கணினியைப் பயன்படுத்தி ஆன்லைனில் விலங்குகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்று அறிக்கை மேலும் கூறுகிறது. இருப்பினும், பயணிகளின் டிக்கெட் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். விலங்குகளுக்கான ஆன்லைன் முன்பதிவு வசதி தொடங்கப்பட்ட பிறகு, நாய்-பூனை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் அதிகாரம் TTE க்கும் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விதி என்ன?

இதற்கான விதிகளின் படி, காவலர்களுக்காக ஒதுக்கப்பட்ட SLR கோச்சில் விலங்குகள் வைக்கப்படும். விலங்குகளின் உரிமையாளர்கள் ரயில் நிறுத்தங்களில் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு தண்ணீர், உணவு போன்றவற்றை வழங்கலாம். கால்நடை டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய ரயில்வே சில நிபந்தனைகளை விதித்துள்ளது. பயணிகளின் டிக்கெட் உறுதி செய்யப்பட வேண்டும். பயணிகள் பயணச்சீட்டை ரத்து செய்தால், விலங்குகளின் டிக்கெட்டை ரீஃபண்ட் செய்ய முடியாது. 

ரயில் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது மூன்று மணி நேரத்திற்கு மேல் தாமதமாகினாலோ, விலங்குகளுக்கான டிக்கெட் கட்டணம் திரும்பக் கிடைக்காது. பயணிகளின் டிக்கெட் மட்டுமே திருப்பித் தரப்படும். குதிரைகள், பசுக்கள், எருமைகள் போன்ற பெரிய வளர்ப்பு விலங்குகள் முன்பதிவு செய்த பிறகு சரக்கு ரயில்களில் கொண்டு செல்லப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார். பயணத்தின் போது அவற்றை கவனித்துக் கொள்ள ஒரு நபர் இருக்க வேண்டும். விலங்குகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் உரிமையாளர்தான் பொறுப்பாக இருப்பார். இதற்கு ரயில்வே பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | Indian Railways முக்கிய அப்டேட்: இதற்கெல்லாம் ரயிலில் அனுமதி இல்லை.. மீறினால் தண்டனை!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News