வாகன ஓட்டிகளே உசார்! இந்த வேகத்திற்கு மேல் சென்றால் ரூ. 1000 அபராதம்!
New Speed Limit: விபத்துகளை தடுக்கும் பொருட்டு கார்கள் மணிக்கு 60 கிமீ வேகத்திலும், பைக்குகள் மணிக்கு 50 கிமீ வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என சென்னை காவல்துறை நிர்ணயித்துள்ளது.
விபத்துகளை தடுக்கும் வகையில் பைக்குகள் மணிக்கு 50 கிமீ வேகத்திலும், கார்கள் மணிக்கு 60 கிமீ வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என்று சென்னை காவல்துறை நிர்ணயித்துள்ளது. சென்னையில் ஏற்படும் வாகன விபத்துகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில், நான்கு சக்கர வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கான புதிய வேக கட்டுப்பாட்டு விதிகளை சென்னை போக்குவரத்துக் காவல் துறை கடந்த வாரம் அறிவித்தது. மேலும் சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களுக்கும் 30 கி.மீ வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பெரியாரே ஹிந்தி சபாவிற்கு இடம் வாடகைக்கு கொடுத்தார் - ஆர்எஸ் பாரதி
சென்னை போக்குவரத்து காவல்துறை கூறியதுபடி, எல்எம்வி வாகனங்களுக்கு வேக வரம்பு மணிக்கு 60 கிமீ மற்றும் எச்எம்வி வாகனங்களுக்கு மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்ல கட்டுப்பாடு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, இரு சக்கர வாகனங்களில் வேக வரம்பு மணிக்கு 50 கிமீ ஆகவும், ஆட்டோக்கள் மணிக்கு 40 கிமீ ஆகவும் உள்ளது. குடியிருப்பு பகுதிகளில், அனைத்து வகையான வாகனங்களுக்கும் 30 கி.மீ வேக வரம்பில் செல்ல நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கடந்த ஆண்டு சாலை விபத்துகள் குறைந்த நகரங்களில் சென்னை முதலிடத்தில் இருந்தது.
2021 ஆம் ஆண்டில் 5,034 சாலை விபத்துகளைப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை 2022ல் 3,452 ஆகக் குறைந்துள்ளது. சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைத்த நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இந்த அறிக்கையின்படி, 68 சதவீத சாலை விபத்துகள் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் ஏற்படுகின்றன. மேலும், 2018 முதல் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஏற்படும் மொத்த வாகன விபத்துகளில் 12. 5 சதவீதம் தமிழ்நாட்டில் ஏற்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, அதிவேகமாக சாலையில் செல்வோரை கண்காணிக்க மற்றும் தடுக்க சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு புதிய முயற்சிகளைக் கொண்டு வந்தனர்.
வாகன ஓட்டிகள் போலீசார் அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை மீறி ஓட்டினால், உடனடி சலான்கள் வழங்கும் வேக ரேடார் கருவிகளை முக்கிய சாலைகளில் பொருத்தியுள்ளனர். 360 டிகிரியில் சுழலும் திறன் கொண்ட ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரெகக்னிஷன் (ANPR) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாமல் செல்வது, 3 பேர் இரு சக்கர வாகனத்தில் செல்வது, செல்போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது, அதிவேகமாகச் செல்வது போன்ற அனைத்து வகையான சாலை விதிமீறல்களையும் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
அதிவேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு எதிராக புதிய கருவிகளைப் பயன்படுத்திய முதல் நாளே சென்னை நகர போக்குவரத்துக் காவல் துறையினர் 184 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். வேகமாக செல்லும் வாகனங்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்பீட் ரேடார் இயந்திரங்களைப் பயன்படுத்தி சனிக்கிழமை 121 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 121 வழக்குகளில், 117 இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் மற்றவர்கள் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | டிடிஎப் வாசன் மீண்டும் பைக் ஓட்ட முடியுமா? காவல்துறை சொல்வது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ