டிடிஎப் வாசன் மீண்டும் பைக் ஓட்ட முடியுமா? காவல்துறை சொல்வது என்ன?

சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை வைத்துக்கொண்டு  இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் டிடிஎஃப் வாசன் வாகனம் ஓட்ட முடியாது-  தமிழக போக்குவரத்து துறை தகவல்

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 4, 2023, 11:32 AM IST
  • சிறையில் இருந்து வந்தார் டிடிஎப் வாசன்
  • மீண்டும் பைக் ஓட்டுவேன் என அதிரடி பேச்சு
  • பைக் ஓட்டமுடியாது என காவல்துறை விளக்கம்
டிடிஎப் வாசன் மீண்டும் பைக் ஓட்ட முடியுமா? காவல்துறை சொல்வது என்ன? title=

டிடிஎஃப் வாசன் கைது

பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடி எஃப் வாசன் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது விபத்திற்கு உள்ளானார். இதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் அவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், போக்குவரத்துத்துறை அவரது லைசென்ஸ் உரிமையை 10 வருடத்திற்கு ரத்து செய்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு ஜெயலில் அடைக்கப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

மேலும் படிக்க | தமிழகத்தில் வெளுத்துக்கட்டும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?

மீண்டும் பைக் ஓட்டுவேன் - வாசன்

ஜாமின் கிடைத்த நிலையில், டிடிஎஃப் வாசன் நேற்று சிறையில் இருந்து வெளியில் வந்தார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர், சர்வதேச லைசென்ஸ் பெற்று மீண்டும் பைக் ஓட்டுவேன் எனத் தெரிவித்துள்ளார். டிடிஎஃப் வாசன் பேசும்போது, " பைக்கும் ஓட்டுவேன். படத்திலும் நடிப்பேன். ஆர்வத்தை எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது. சர்வதேச லைசென்ஸ் எடுக்கலாம். இல்லையெனில் மேல்முறையீடு செய்யலாம். கை போனதைவிட, லைசென்ஸ் போனபோது கண் கலங்கிவிட்டேன். எல்லாவற்றிலும் உறுதியாக இருப்பேன். ஆனால் 10 வருடம் லைசென்ஸ் ரத்து என்றபோது சற்று வருத்தமாக இருந்தது." என தெரிவித்தார். 

போக்குவரத்து காவல்துறை விளக்கம்

மேலும், பத்து ஆண்டுகளுக்கு லைசென்ஸ் ரத்து என்பது மிகப்பெரிய தண்டனை எனவும், இது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். டிடிஎஃப் வாசனின் இந்த பேச்சுக்கு தமிழக போக்குவரத்து காவல்துறை சார்பில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில் சர்வதேச லைசென்ஸ் வைத்து தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மூலையிலும் 10 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்ட முடியாது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | சென்னை: ’இறந்த குழந்தைக்கு சிகிச்சை’ பிரபல தனியார் மருத்துவமனை மீது பகீர் குற்றச்சாட்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News