மக்களே இன்று (18.11.2024) இந்த பகுதிகளில் மின்தடை இருக்கும்! முழு விவரம்!
Power Shut Down: மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் சில இடங்களில் மின்தடை இருக்கும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே மக்கள் அதற்கேற்ப வேலைகளை திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தல்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சில பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று திங்கட்கிழமை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சில பகுதிகளில் மின்தடை அறிவித்துள்ளன. இந்த மின்தடை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், ஒருசில இடங்களில் மாலை 5 மணி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்காலிகமாக மின்சாரம் தடைபடும். எனவே மின்தடை ஏற்படும் பகுதிகளில் இருக்கும் மக்கள் இதனை கருத்தில் கொண்டு அதற்கேற்ப பணிகளை திட்டமிட்டு கொள்ளவும், சிரமத்தை குறைக்கவும் மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் எந்த எந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
மேலும் படிக்க | ஹைதராபாத்தில் நடிகை கஸ்தூரி சிக்கியது எப்படி? தகவல் கொடுத்த வீட்டு பணியாளர்கள்
சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருமுல்லைவாயல்
மோரை, மோரை இண்டஸ்ட்ரீஸ், வெல்டெக் மெயின் ரோடு, ஷீலா நகர், விஜயலட்சுமி நகர், சீனிவாச நகர், சப்த கிரி நகர், பார்கவி நகர்
தொண்டியார்பேட்டை
கும்மாளம்மன் கோயில் தெரு, ஜிஏ சாலை, TH சாலை (பகுதி I), சோலையப்பன் தெரு, கப்பலபொலு தெரு, விபி கோயில் தெரு, தாண்டவராயன் தெரு, மழை மருத்துவமனை, ஸ்ரோ ரங்கம்மாள் தெரு, ராமானுஜம் தெரு, சஞ்சீவராயன் தெரு, சுப்புராயன் தெரு, பாலுமுதலி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, இளைய தெரு (பகுதி I), மன்னப்பன் தெரு (பகுதி I), தங்கவேல் தெரு, நைனியப்பன் தெரு, பெருமாள்கோவில் தெரு, வீரக்குட்டி தெரு, கேஜி கார்டன், மேயர் பாசுதேவ் தெரு.
கோவையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்
பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொயல் நகர், சத்தியநாராயண புரம், பள்ளபாளையம் EB அலுவலகம், கரவலி சாலை, நாகமாநாயக்கன் பாளையம், காவேரி நகர், காமாட்சி புரம், கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம், பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு பகுதி.
கரூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்
பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி, பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்து வீதி, மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொறவபட்டி, பாகநத்தம், கருப்பாயி கோயில் தெரு, கச்சேறு பிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, சந்தை, தாந்தோணிமலை, சுங்ககேட், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம், ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளைபாளையம், வெள்ளியனை, செல்லாண்டிபட்டி.
புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மின்தடை ஏற்படும் பகுதிகள்
நாகுடி முழுப் பகுதியும், வல்லவாரி ஏரியா முழுவதும், அமரடக்கி முழுப் பகுதியும், ஆவுடையார்கோயில் பகுதி முழுவதும், கொடிக்குளம், திருப்பத்தூர் டவுன், திருக்கோஷ்டியூர், தென்கரை, புதுப்பட்டி, ரணசிங்கபுரம், காட்டம்பூர்.
பல்லடம் மின்தடை ஏற்படும் பகுதிகள்
மேட்டுப்பாறை ஃபீடர், இல்லியம்புத்தூர் ஃபீடர், காங்கேயம்பாளையம், செட்டிபாளையம், பச்சாபாளையம், காங்கேயம் சாலை, சுக்குடிபாளையம், வெள்ளமடை, வாட்டர் ஒர்க்ஸ் ஃபீடர், கே.பி.கிராமன், அரச்சலூர், சிவன்மலை, மருதுரை, குட்டப்பாளையம் ஃபீடர், நத்தக்கடையூர்.
மேலும் படிக்க | பேட்டியில் விஜய் படத்தை காட்டிய இளைஞர் - வானதி ஸ்ரீனிவான் சொன்ன பதில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ