Temperature In Tamil Nadu: தமிழ்நாட்டில் இன்றிலிருந்து வருகின்ற 18 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 39-40 வரையிலும் புதுச்சேரியில் 29-30 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களிலும் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வீட்டை விட்டு வெளியில் செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2 முத 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும்:
தமிழ்நாட்டில் பல நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி வரும் நேரத்தில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று, நாளை (புதன் மற்றும் வியாழன்) ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முத 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக தலைநகரம் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும். ஈரப்பதம் அதிகமாகவும் இருக்கும்போது, வெப்ப அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என சென்னை வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க: கோவை: சர்வதேச யோகா போட்டியில் தங்கப்பதக்கங்கள் வென்று சாதித்த இல்லத்தரசிகள்..!


நேற்றைய கோடை வெயிலின் தாக்கம் எப்படி இருந்தது -அதன் நிலவரம்:
தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் 18 நகரங்களில் நேற்று (மே 16, செவ்வாய்கிழமை) 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவானது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.


திருத்தணி, சென்னை நுங்கம்பாக்கம், வேலூரில் தலா 107 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், பரங்கிப்பேட்டையில் தலா 105 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.


கடலூர், ஈரோடு, திருச்சியில் தலா 104 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. மதுரை மற்றும் நாகப்பட்டினத்தில் தலா 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. பாளையங்கோட்டை, சேலம், தஞ்சாவூரில் தலா 102 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. நாமக்கல் மற்றும் திருப்பத்தூரில் தலா 101 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. தர்மபுரியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.


புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கோடை வெயில் சுட்டெரிப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.


மேலும் படிக்க: "அடுத்த 3 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்" இயல்பிலிருந்து 2- 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்


நேற்று முன்தினம் பதிவான அதிகபட்ச வெப்பநிலை நிலவரம்:
அதேபோல நேற்று முன்தினம் (மே 15) வேலூரில் அதிகபட்சமாக 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. அதேபோல சென்னை மெட்ரோ சிட்டி மற்றும் திருச்சியில் 105 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.


வெப்பநிலை அதிகரிக்க காரணம் என்ன? தெரிந்துக்கொள்ளுங்கள்
வடமேற்கிலிருந்து வறண்ட தரைக்காற்று தமிழகம் நோக்கி வீசுகிறது. மேலும், சூரியனின் ஒளிக்கதிர்கள் நேரடியாக தமிழகத்தின் நிலப்பரப்பில் விழுகின்றன. வங்கக் கடலில் உருவான மோச்சா புயல் காரணமாக காற்றின் திசையில் மாற்றம் ஏற்பட்டு, கடலில் இருந்து வீசக் கூடிய கிழக்கு திசை காற்றும் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக கடல் காற்றும் வீசுவது சற்று தாமதமாகிறது. இதன் விளைவாக, வெப்பத்தின் தீவிரம் மிக அதிகமாகவும், தாங்க முடியாததாகவும் உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க: டிரான்ஸ்பார்மரில் காத்தாடியை எடுக்க முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ